இண்டிகோ விமானத்தில், திங்கள்கிழமையன்று சென்னையில் இருந்து கோவைக்குச் சென்ற 24 வயதுடைய பயணி ஒருவருக்கு கோவையில் கோவிட் -19 க்கு சாதகமாக முடிவு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து விமானத்தின் இயக்கக் குழுவினர் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு : தலைவர்கள் இரங்கல்
சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அறிகுறியில்லாமல் இருந்திருக்கிறார். திங்கள்கிழமை மாலை விமான நிலையத்தில் உள்ள அனைத்து பயணிகளுடன் அவரும் சோதனை செய்யப்பட்டிருக்கிறார்.
“அவர் மட்டுமே விமானத்தில் நேர்மறை சோதனை செய்தார். மற்றவர்கள் அனைவரும் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலுக்காக சென்றுள்ளனர். இது வரும் நாட்களில் அறிகுறிகளுக்காக கண்டறியப்படும்” என்று மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்தப் பயணி சென்னையைச் சேர்ந்த பார் ஹோட்டலில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
மார்ச் 24 அன்று நாடு தழுவிய பூட்டுதல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர் உள்நாட்டு விமானங்கள் திங்கட்கிழமை முதல் இயக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு விமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதற்கு முன்பு, திடீரென மக்கள் தங்கள் மாநிலத்திற்குள் வருவதற்கான வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதைப் பற்றி பல மாநிலங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
”மே 25 ஆம் தேதி மாலை, சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு 6E-381-ல் பயணித்த பயணி ஒருவருக்கு கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை வந்துள்ளது என்று கோயம்புத்தூர் விமான நிலைய மருத்துவர் உறுதிப் படுத்தியிருக்கிறார். அந்த பயணி தற்போது கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மாநில மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்” என்று இண்டிகோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முக கவசம் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கொண்டு அந்தப் பயணி விமானத்தில் அமர்ந்திருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“அவருக்கு அருகில் வேறு யாரும் அமர்ந்திருக்கவில்லை, இது பரவுவதற்கான சாத்தியத்தை கணிசமாகக் குறைக்கிறது… இயக்க குழுவினர் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி மற்ற பயணிகளுக்கு அறிவிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு பங்களிப்பு குறைவு; ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
திங்களன்று, நாடு முழுவதும் சுமார் 500 விமானங்கள் இயக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி கணக்கின்படி 325 புறப்பாடுகளில் 41,673 பயணிகள் பயணித்திருக்கிறார்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”