IPS Officer Hemant Kalson relieved relieved from poll duty : நாடெங்கும் தேர்தல் தொடர்பான வேலைகள் மும்பரமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல்கள் வருகின்ற 18ம் தேதி நடைபெற இருப்பதை ஒட்டி, பல்வெறு மாநிலங்களில் இருந்தும் சிறப்பு அதிகாரிகள் தமிழகம் வரத் துவங்கியுள்ளனர்.
IPS Officer Hemant Kalson
தேர்தல் பணிக்காக ஹரியாணாவில் இருந்து ஐ.பி.எஸ். ஹேமந்த் கல்சன் என்பவர் அரியலூர் வருகை புரிந்துள்ளார். அவர் அரசு சுற்றுலா மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று காலை எழுந்து, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து 9 முறை வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதனை விசாரிக்க பெரம்பலூர் எஸ்.பி. தீவி விருந்தினர் மாளிகை விரைந்துள்ளார்.
தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், விருந்தினர் மாளிகையில் இருந்த ஹேமந்த் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அவரை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க : 2-வது தொகுதியாக கேரளாவின் வயநாட்டை ராகுல் தேர்வு செய்ய காரணம் என்ன?