நான்கவாது பொது முடக்கநிலை முடிவடையும் நிலையில், முதல்வர் பழனிசாமி நேற்று கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு செய்தார்.
இந்நிலையில், ஜூன் 1 முதல், தமிழகத்தில் குறிப்பிட்ட நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஊரடங்கு முடிந்து பேருந்துகளை இயக்கும்போது சிரமம் ஏற்படாத வகையில், பேருந்துகள் பராமரிப்பு, பழுது நீக்கும் பணிக்கு தொழில்நுட்ப பணியாளர்கள் பணிக்கு வர ஆணை மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
ஜூன் 1 முதல் ரயில் இயங்குமா?
கொரோனா பெருந்தொற்று பொது முடக்கநிலை காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்ட நிலையில், இந்திய ரயில்வே நிர்வாகம், வரும் ஜூன் 1 தேதி முதல் கூடுதலாக 100 ஜோடி ரயில் சேவைகளை இயக்க உள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு கடந்த மே 21 அன்று தொடங்கியது. இருப்பினும், இந்த 200 பயணிகள் ரயில்கள் தமிழகத்துக்கு எந்த ரயிலும் அறிவிக்கப்படவில்லை.
மே 1 ஆம் தேதியில் இருந்து இயக்கப்படும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மற்றும் மே 12 ஆம் தேதியில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ஏ.சி. ரயில்களின் (30 ரயில்கள்) சேவைகளுடன் கூடுதலாக இவை இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, கோவை -காட்பாடி, மதுரை- விழுப்புரம், திருச்சி- நாகர்கோவில், கோவை- காட்பாடி ஆகிய வழித்தடங்கள் வழியே இந்த சிறப்பு ரயில்கள் ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து இயக்கப்படுகிறது. இதற்கான, முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1 முதல் பஸ்கள் இயங்குமா?
கொரோனா பெருந்தொற்று காரணமாக, தமிழகத்தில் அத்தியாவசிய பணிகளுக்காக சுமார் 300 பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகம் இயக்கி வந்தது. நான்காவது போதுமுடக்கம் வரும் 31ம் தேதியோடு முடிவடையும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் போக்குவரத்துகள் இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் காணப்படுகிறது.
இந்நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், “300 பேருந்துகளைத் தவிர்த்து, மீதமுள்ள பேருந்துகள் (3284) பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 1775 பேருந்துகளின் HFC & FC ஆகியவை ஜூன் 2020 காலவதியாக உள்ளது. எனவே, மேற்கொண்ட பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்து FITNESS CERTIFICATE வாங்க வேண்டி உள்ளதால், MTC(W),FC Unit- கள் மற்றும் RC unit- களில் பணிபுரியும், பணியாளர்கள் இரண்டு நாளுக்கு ஒருமுறை உடனடியாக பணிக்கு வரவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, பொது முடக்கநிலை காலம் முடிந்த பின்பு பேருந்துகள் இயக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து போக்குவரத்து செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பினார்.
விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்: 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்து அனுமதி, ஆன்லைனில் டிக்கெட் கட்டணம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Irctc tiket reservation tamilnadu 4 inter district trains reservations will open today from 4pm
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!