Advertisment

சென்னை திமுக.வின் கம்பீரம் சரிந்தது... ஜெ.அன்பழகன் வாழ்க்கை குறிப்பு

திரைப்படத்துறையில் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் ஜெ. அன்பழகன் விளங்கினார்

author-image
WebDesk
Jun 10, 2020 09:47 IST
New Update
j anbazhagan death news

j anbazhagan death news

j anbazhagan death news : கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இன்று (10.6.20) தனது 62 ஆவது பிறந்த நாளை கொண்டாட இருந்த அன்பழகன் பிறந்த நாள் அன்றே பரிதாபமாக உயிரிழந்திருப்பது திமுக தொண்டர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

கொரோனா தொற்று:

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆரம்பத்தில், அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அதன் பின்பு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் இருந்த அன்பழகனின் உடல்நிலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி விசாரித்து வந்தார். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு சென்று அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

திமுக தொண்டர்களும் அன்பழகன் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அன்பழகனின் இறப்பு செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

யார் இந்த ஜெ. அன்பழகன்?

திமுக சென்னையில் வேறொன்ற அதிகம் உழைத்து,பாடுப்பட்ட திமுக முன்னோடிகளில் அனைவருக்கும் பரீட்சையமான தியாகராயர் பழக்கடை ஜெயராமனின் மகன் தான் இந்த ஜெ. அன்பழகன். இவரின் தந்தை மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியிடம் நெருக்கமாக இருந்தார். அதன் காரணமாக அன்பழகனுக்கு கட்சியில் சீட் வழங்கப்பட்டது.

வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு 2001, 2011, 2016 ஆகிய சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற்று 3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார். 2001-ல் தி.நகர் தொகுதியிலும் 2006, 2011-ல் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியிலும் எம்.எல்.ஏ.வாக இருந்த அன்பழகனுக்கு தொகுதி மக்களிடம் நல்ல வரவேற்பு. இவரின் மறைவு அந்த பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திமுக வெற்றி பெற அதிகம் உழைத்தவர்களில் அன்பழகனுக்கு முக்கிய பங்கு உள்ளது. தனது தந்தை போலவே இவரும், கட்சிக்கு கடைசி நேரம் வரை உழைக்க வேண்டும் என்பதில் அதி தீவிரமாக இருந்தார். ஸ்டாலின் அதிகம் பயன்படுத்தும் எம்.எல்.ஏ பெயர்களின் அன்பழகனும் ஒருவர்.  ஜெ. அன்பழகனின் இந்த இழப்பு கண்டிப்பாக திமுக - விற்கு  பேரழிப்பு தான்.

திமுக.வின் தூண் சரிந்தது: மு.க.ஸ்டாலின் - தலைவர்கள் இரங்கல்

அன்பழகன் திமுகவின் தென் சென்னை மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறார். கூடவே,திரைப்படத்துறையில் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் ஜெ. அன்பழகன் விளங்கினார் என்பது கூடுதல் தகவல்.

ஜெ. அன்பழகன் சர்ச்சைகள்:

1. பாஜகவுக்கு பிரச்சினை என்றால் மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் கருத்துச் சொல்வார் என ஒருமுறை அன்பழகன் பேசியது ரஜினி தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பி இருந்தது.

2. அதே போல், முதல்வர், எடப்பாடி பழனிசாமி கொலை செய்தவர் என்றும் தற்போதும் ரவுடி போலத்தான் வலம் வருகிறார் என அன்பழகன் பதிவு செய்த கருத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிமுக-வினர் அன்பழகனின் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று தொடர்ந்து  வலுப்புகளை முன்வைத்தனர்.

3. 6 மாதங்களுக்கு முன்பு, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. சபாநாயகரின் கோரிக்கையை ஏற்று அன்பழகனை நீக்க கொண்டு வரப்பட்ட தீர்மானம் பேரவையில் நிறை வேறியது.

அதற்கு காரணம்,  தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை கிழித்து திமுக எம்.எல்.ஏ ஜே.அன்பழகன் ஆவேசமாக செய்ல்பட்டது தான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Dmk #Corona Coronavirus #J Anbazhagan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment