J Anbazhagan Death: திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 8.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. திமுக-வின் முக்கிய தூண்களின் ஒருவரான ஜெ.அன்பழகனின் மறைவு, கட்சியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
J Anbazhagan Death Live : சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் மரணம் – தனியார் மருத்துவமனை
திமுகவில் வெளிப்படையாக பேசும் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் ஜெ.அன்பழகன். ஃபேஸ்புக், ட்விட்டர் என தனது கருத்துகளை உடனடியாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வந்தவர்.
2001ல் தியாகராய நகர் தொகுதியிலும், 2011 மற்றும் 2016 தேர்தல்களில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்.
அவர் முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2001 தேர்தலில், தியாகராய நகர் தொகுதியில், அதிமுகவின் சுலோச்சனா சம்பத்தை 2,499 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி, உடல்நிலை சரியில்லாத போது, அவருடன் படம் எடுத்துக் கொண்ட ஜெ.அன்பழகன்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு நேரத்தில், கடந்த மார்ச் மாத இறுதியில், நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்க சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.
சி.ஏ.ஏ-வுக்கு எதிராக மக்களிடம் வாங்கிய கையெழுத்துகளை ஆளுநரிடம் ஒப்படைத்தபோது...
ஒரு மாத சம்பளமான ரூ.1,05,000-ஐ தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார், ஜெ.அன்பழகன்.
கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபோது...
கலைஞர் திருவுருவச்சிலை திறப்பு விழாவின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
திமுக எம்.எல்.ஏ மற்றும் அரசியல்வாதியாக மட்டுமல்லாது தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும் இவர் அறியப்படுகிறார்.
2013ல் ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளராகவும், ''யாருடா மகேஷ்'' என்ற படத்திற்கு விநியோகஸ்தராகவும் அன்பழகன் இருந்துள்ளார்.
2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த தலைவா படம் வெளியாவதில் சிக்கல் உண்டானது.
குழுவினர் விரும்பினால் தனது 'அன்பு பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடத் தயார் என்று கூறியிருந்தார் அன்பழகன்.
தீவிர விஜய் ரசிகரான ஜெ.அன்பழகன், விஜய்யின் ஒவ்வொரு படத்தின் டீசர், ட்ரைலர், பட வெளியீட்டின் போதும், தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்துவார். அவரது மறைவு மற்ற விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஜெ.அன்பழகனுக்கு கிரிக்கெட்டிலும் ஆர்வம் அதிகம். அவர் தலைமையில் நிறைய விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தியுள்ளார்.
திமுக எம்.பி கனிமொழியுடன்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் கலைஞர் நினைவிடத்தில்...
சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, கையெழுத்து வாங்கியபோது...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற வேளையில்...
உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த போது...
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”