ஊரடங்கு உத்தரவு – சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்க ஐகோர்ட் உத்தரவு

மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், ஊரடங்கு தினத்தன்று, சாலையோரம் வசிக்கும் வீடில்லாத மக்கள், மாநகராட்சி சமுதாய நலக் கூடங்களில் தங்க வைக்கப்படுவர் என தெரிவித்தார்

janata curfew madras high court on issue food for platform people
janata curfew madras high court on issue food for platform people

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 22ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை முன்னிட்டு, சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு சமூக நலக் கூடங்களில் தங்க அனுமதித்து, உணவும் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொரோனா பாதிப்பை தவிர்க்கும் வகையில் வரும் 22ம் தேதி மக்கள் எவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் எனவும், அன்றைய தினம் ஊரடங்கு நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிருமி நாசினி, முகக் கவசம் அதிக விலைக்கு விற்பனை – அரசு பதிலளிக்க உத்தரவு

இந்நிலையில் சென்னையில் வீடில்லாமல் 9 ஆயிரம் பேர் வரை சாலையோரம் வசித்து வருவதால் ஊரடங்கு அன்று அவர்களை மாநகராட்சி சமுதாய நலக் கூடங்களில் தங்க அனுமதித்து, உணவு வழங்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சூரியபிரகாசம், நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வில் முறையிட்டார்.

அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், ஊரடங்கு தினத்தன்று, சாலையோரம் வசிக்கும் வீடில்லாத மக்கள், மாநகராட்சி சமுதாய நலக் கூடங்களில் தங்க வைக்கப்படுவர் என தெரிவித்தார்.

முரசொலி நில விவகாரம் – ராமதாஸ் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை

இதை அடுத்து, அவர்களுக்கு உணவும் வழங்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தனியார் திருமண மண்டபங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Janata curfew madras high court on issue food for platform people

Next Story
முரசொலி நில விவகாரம் – ராமதாஸ் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடைmurasoli land issue madras high court interim ban for investigate ramadoss
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express