scorecardresearch

‘5% கூட உங்ககிட்ட இல்ல; தி.மு.க-வின் பி- டீம் நீங்க’: ஓ.பி.எஸ் அணி மீது ஜெயக்குமார் தாக்கு

கூலிக்காக வேலை செய்பவர் மருது அழகுராஜ்; சசிகலாவும் தினகரனும் மக்களால் விலக்கபட்டவர்கள்; ஓ.பி.எஸ் பொதுக்குழுவில் தன் பலத்தைக் காட்டட்டும் – ஜெயக்குமார்

Tamil News, Tamil News Today Latest Updates

Jayakumar says OPS don’t have 5% support in ADMK general council: ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.,வின் பி டீம் ஆக செயல்படுகிறார். அவருக்கு பொதுக்குழுவில் ஆதரவு இல்லை என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது,

மருது அழகுராஜ் கூலிக்காக வேலை செய்பவர். கட்சிக்காக எதையும் செய்ததில்லை. அவர் பல கட்சிகளில் இருந்தவர். நமது எம்.ஜி.ஆர் பொறுப்பாசிரியராக இருந்தப்போது, நிதி முறைகேடு செய்ததற்காக வெளியேற்றப்பட்டவர். பின்னர் நமது அம்மா நாளிதழிலும், நிதி முறைகேடுகள் செய்துள்ளார். இன்றைக்கு ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்துக்கொண்டு, பொதுக்குழு உறுப்பினர்களைப் பற்றி தவறாக பேசி வருகிறார்.

இதையும் படியுங்கள்: ஓ.டி.பி எண் சொல்வதில் தாமதம்… ஓலா கார் டிரைவரால் ஐ.டி ஊழியர் அடித்துக் கொலை

பொதுக்குழுவில் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 98% பொதுக்குழு உறுப்பினர்கள், ஒற்றைத்தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என்று விரும்புகின்றனர். நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.

கோடநாடு கொலை வழக்கில் இ.பி.எஸ் முதலமைச்சராக இருந்தப்போது விரைந்து நடவடிக்கை எடுத்தார். ஆனால், குற்றவாளிகளை காப்பாற்ற போராடி வருவது தி.மு.க தான்.

சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தவர்களை கட்சியை விட்டு விலக்கவும், அவர்கள் ஜெயலலிதா மரணத்திற்காக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பி.எஸ். ஆனால், ஆறுமுகச்சாமி ஆணையத்தில் சசிகலாவுக்கு நற்சான்றிதழ் வழங்கியவர் ஓ.பி.எஸ்.

அதேநேரம், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்ததற்கு அ.தி.மு.க தொண்டர்கள் கொதித்துபோயுள்ளனர். தி.மு.க.,வோடு கூட்டணி சேர்ந்து ஓ.பி.எஸ் வேலைப்பார்க்கிறார். இதையெல்லாம் மறந்துவிட்டு மருது அழகுராஜ் பேசுவதை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நான் தான் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ் கூறிவருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டப்போது, நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என ஜெயக்குமார் கூறினார்.

நமது அம்மா கட்சி பத்திரிக்கையா என கேட்டதற்கு, முரசொலிக்கு எப்படி உதயநிதி பதிப்பாளராக இருக்கிராறோ, அதுபோல் நமது அம்மாவுக்கு சந்திரசேகர் இருக்கிறார். நமது அம்மா கட்சி பத்திரிக்கை தான், என ஜெயக்குமார் கூறினார்.

பின்னர், சசிகலா, டி.டி.வி தினகரன் தமிழக மக்களால் விலக்கப்பட்ட சக்திகள். ஊர் ஊராக பயணம் செய்வதால் ஒரு பயனும் இல்லை.

ஓ.பி.எஸ்-ஐ ஓரங்கட்டும் எண்ணம் இல்லை. பொதுக்குழுவில் வந்து பலத்தைக் காட்டட்டும், அவரிடம் 5% கூட ஆதரவாளர்கள் இல்லை. தி.மு.க.,வின் பி டீம் ஆக செயல்படுகிறார். கட்சியை சிதைக்கும் நோக்கத்துடன் நீதிமன்றம் வரை ஓ.பி.எஸ் செல்கிறார்.

நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான். பொதுக்குழு தான் அதிகாரம் படைத்தது. பொதுக்குழு இ.பி.எஸ்-ஐ ஒற்றை தலைமையாக தேர்வு செய்ய விரும்புகிறது. இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Jayakumar says ops dont have 5 support in admk general council

Best of Express