போயஸ் தோட்டத்து இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம்
Poes garden : ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம். ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம். மக்கள் பணத்தில் தனியார் சொத்துகளை வாங்கினால், முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். இதனால், வேதா நிலையத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
Poes garden : ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம். ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம். மக்கள் பணத்தில் தனியார் சொத்துகளை வாங்கினால், முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். இதனால், வேதா நிலையத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
போயஸ் தோட்டத்து இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.போயஸ் தோட்ட இல்லத்தில் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றி விட்டு மீதமுள்ளதை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
Advertisment
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுமார் 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உறவினர்களாக ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டு அவர்களும் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர்.
மேலும் வருமான வரி பாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.
இந்த வழக்குகளின் நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் தீர்ப்பளிக்கின்றனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம். ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம். மக்கள் பணத்தில் தனியார் சொத்துகளை வாங்கினால், முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். இதனால், வேதா நிலையத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
ஜெ., சொத்துகள் மீது தீபா,தீபக், இரண்டாம் நிலை வாரிசுகள். அவர்களுக்கு சொத்தில் உரிமை உண்டு. ஜெ.,வின் சொத்துகளின் ஒரு பகுதியை அறக்கட்டளை கொண்டு நிர்வகிக்கலாம். இந்த பரிந்துரை குறித்து, எட்டு வாரங்களில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், புகழேந்தி, ஜானகிராமன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil