கடம்பூர் ராஜூ சர்ச்சை பேச்சு : அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொது நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை நடத்தி வருகிறது அதிமுக. நேற்று முன்தினம் (17/09/2018) அன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ.
Advertisment
கடம்பூர் ராஜூ சர்ச்சை பேச்சு - விளக்கம்
அப்போது கருணாநிதியின் சமாதி குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார் கடம்பூர் இராஜூ. அவர் ”மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு மெரினாவில் இடம் அளித்தது அதிமுக அளித்த பிச்சை” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் நாங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்ட காரணத்தால் தான் கருணாநிதிக்கும் அரசு மரியாதை கிடைத்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த பேச்சு குறித்து விளக்கம் ஒன்றினைக் கூறினார் கடம்பூர் ராஜூ.
“திமுகவினர் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான ஜெயலலிதாவின் சமாதியை அங்கு வைக்கக் கூடாது என்றும், திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் சமாதி இடிக்கப்படும் என்றும் கூறினார்கள். அதனால் தான் நான் கருணாநிதி சமாதி குறித்து பேசினேன் என்று” விளக்கம் அளித்துள்ளார் கடம்பூர் ராஜூ.