கருணாநிதி சிலைத் திறப்பு நிகழ்ச்சி : பல்வேறு மாநில முதலமைச்சர்கள் 16ம் தேதி தமிழகம் வருகை

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு

By: Updated: December 13, 2018, 10:48:19 AM

கலைஞர் கருணாநிதி சிலைத் திறப்பு விழா : மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னையில் உள்ள அண்ணா அறிவலாயத்தில் அவரின் சிலை திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு கட்சியைத் தேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதி சிலைத் திறப்பு – பங்கேற்கும் அரசியல் பிரமுகர்கள்

கருணாநிதியின் சிலையையும் அறிஞர் அண்ணாவின் சிலையையும் திறப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் மூத்த உறுப்பினருமான சோனியா காந்தி கலந்து கொள்ள உள்ளார். டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றிருந்த முக ஸ்டாலின், சோனியா காந்தியினை நேரில் சந்தித்து இவ்விழாவிற்கான அழைப்பிதலைக் கொடுத்தார்.

மேலும் படிக்க : சோனியா காந்தியின் பிறந்த நாள் : நேரில் சென்று வாழ்த்துகள் கூறிய முக ஸ்டாலின்

சிலை திறப்பு விழாவானது டிசம்பர் 16ம் தேதி மாலை சரியாக 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை  ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் YMCA மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக. ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மற்றும் புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

நிகழ்ச்சி நிரல்

கலைஞர் கருணாநிதி சிலைத் திறப்பு கலைஞர் கருணாநிதி சிலைத் திறப்பு விழா அழைப்பிதல்

வரவேற்புரை நிகழ்த்துகிறார் கழகப் பொருளாளர் துரைமுருகன். சிலையைத் திறந்து வைத்து சோனியா காந்தி சிறப்புரையாற்றுகிறார். வாழ்த்துரை வழங்குகிறார்கள் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி. சென்னை மேற்கு மாவட்ட திமுக கழகச் செயலாளர் நன்றியுரை வழங்க உள்ளார்.

114 அடியில் பிரம்மாண்ட கொடிக்கம்பம்

சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் 114 அடியில் பிரம்மாண்ட கொடிக் கம்பம் ஒன்றை நிறுவியுள்ளனர் கட்சி நிர்வாகிகள். இது நாள் வரையில் இவ்வளவு உயரமான கொடிக் கம்பத்தினை எந்த கட்சியினரும் நிறுவியதில்லை. தென்சென்னை நிர்வாகிகளின் கூட்டு முயற்சியால் இக்கம்பம் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kalaignar karunanidhis statue will be inaugurated on 16 december

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X