Advertisment

'கருணாநிதி போல ராஜதந்திரி என்பதை ஸ்டாலின் நிரூபித்துவிட்டார்' - திருமாவளவன்

Kalaingar Karunanidhi 96 : கலைஞர் கருணாநிதியின் 95வது பிறந்தநாளில் அவரின் சமூக சேவைகளை நினைவுகூறும் தேசத்தலைவர்களின் கருத்துகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kalaignar M Karunanidhi Birth Anniversary

Kalaignar M Karunanidhi Birth Anniversary Live  : ஒரு மகத்தான கலைஞன், நல்ல எழுத்தாளர், திறமையான பேச்சாளர், மாற்றுக் கருத்துகளையும் சித்தாத்தங்களையும் வரவேற்கின்ற அரசியல்வாதி, மொத்தத்தில் ஒரு சமூகநீதிக் கொள்கையை உருவாக்கி, தமிழகத்தை பல்வேறு இடங்களில் தலை நிமிர்த்தி நடக்கவைத்த தலைவனுக்கு இந்த பிறந்தநாள்.

Advertisment

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு தலைவர்களும், அரசியல்வாதிகளும் நட்சத்திரங்களும் தங்களுடைய சமூகவலைதளங்களில், அண்ணாரை நினைப்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க : தலைவர்களுக்கெல்லாம் தலைவர் கலைஞர் கருணாநிதி

 

Live Blog

கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது














Highlights

    20:39 (IST)03 Jun 2019

    வைகோ ஆவேசம்

    20:25 (IST)03 Jun 2019

    மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. எடப்பாடி அரசும் மோடி அரசும் கொடுத்த தாக்குதல்களை முடித்து காட்டியவர் ஸ்டாலின்

    - சென்னையில் திமுக பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

    19:59 (IST)03 Jun 2019

    தமிழகம் தலை நிமிர்ந்து இருக்கிறது - திருமா

    19:00 (IST)03 Jun 2019

    சேவை செய்ய வயது என்பது பொருட்டல்ல

    கருணாநிதி வாழ்க்கை வரலாற்றில் திருப்புமுனை தந்த பெரம்பலூர் தொகுதியை எனக்கு ஒதுக்கிய ஸ்டாலினுக்கு நன்றி 

    சேவை செய்ய வயது என்பது பொருட்டல்ல; அதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் கருணாநிதி

    - சென்னையில் திமுக பொதுக்கூட்டத்தில் பாரிவேந்தர் பேச்சு

    17:49 (IST)03 Jun 2019

    கலைஞர் வாழ்கிறார்; அன்னை தமிழை காப்போம் - மு.க.ஸ்டாலின்

    17:42 (IST)03 Jun 2019

    திமுக நன்றி தெரிவிக்கும் கூட்டம் தொடங்கியது

    திமுக நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நந்தனம் ஓய்எம்சிஏ அரங்கத்தில் தொடங்கியது. இப்பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

    16:17 (IST)03 Jun 2019

    100 அடி உயரத்தில் கருணாநிதியின் கட் அவுட்

    திமுக சார்பில் நந்தனத்தில் இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு, பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையேற்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதற்காக 100 அடி உயரத்தில் தி.மு.க.வின் கட்சிக்கொடி மற்றும் 100 அடி உயரத்தில் கருணாநிதியின் கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளன.

    16:14 (IST)03 Jun 2019

    மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் கூட்டம்

    14:03 (IST)03 Jun 2019

    போராட்டங்கள் எப்பொழுதும் ஓய்வதில்லை... இடையறாக் காவலே விடுதலைக்கான விலை - ப.சிதம்பரம் ட்வீட்

    போராட்டங்கள் எப்பொழுதும் ஓய்வதில்லை. இடையறாக் காவலே விடுதலைக்காக நாம் அளிக்கும் விலை என ப.சிதம்பரம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    12:54 (IST)03 Jun 2019

    திராவிட இயக்கத்தை முன்னின்று நடத்திய முக்கியமான தலைவர் - காங்கிரஸ் ட்வீட்

    கருணாநிதி ஒரு திறமையான எழுத்தாளார். பின்னாளில் தமிழ் நாட்டில் அதிக காலம் முதல்வராக நீடித்த ஒரு தலைவர். திராவிட இயக்கத்தை முன்னின்று நடத்திய தலைவர்களில் ஒருவர். தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி. அவருடைய பிறந்த தினத்தன்று அவருடைய அர்பணிப்புகளை நினைவு கூறுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ட்வீட் செய்துள்ளது.M. Karunanidhi was a prolific writer who went on to become the longest serving Chief Minister of Tamil Nadu. He was a stalwart of the Dravidian movement & a true representative of the Tamil people. We remember his contributions on his birth anniversary. pic.twitter.com/SjVFN0mfDy— Congress (@INCIndia) 3 June 2019

    12:47 (IST)03 Jun 2019

    ராகுல் காந்தி ட்வீட்

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ட்வீட் செய்துள்ளார். தமிழ் மக்களின் உண்மையான தலைவன். உங்களின் நியாபகம் என்றும் அகலாது என்றும் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். 

    12:43 (IST)03 Jun 2019

    நாராயணசாமி கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்

    புதுச்சேரியில் அண்ணா சிலை பகுதியில் வைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அந்த நிகழ்வில் பங்கேற்பு.

    11:46 (IST)03 Jun 2019

    இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக சில முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது

    குடிநீர் பஞ்சத்தைப் போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தேவை என்றும், காவிரி டெல்டா பகுதியில் இருக்கும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அப்பகுதியினை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    11:43 (IST)03 Jun 2019

    இருமொழி கொள்கைகளுக்கு ஆபத்து என்றால் ஜனநாயக ரீதியில் எதிர்ப்போம் - திமுக

    தமிழகத்தில் இரு மொழி கொள்கைகளுக்கு ஆபத்து என்றால் திமுக அதை எதிர்ப்பதற்கு எப்போதும் தயங்காது. ஜனநாயக வழியில் நின்று போராடவும் தயங்காது. தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம் என மத்திய அரசுக்கு திமுக வேண்டுகோள்.

    10:38 (IST)03 Jun 2019

    தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி; இன்று நிரந்தர உயிர்ப்புச் சக்தி! - ஸ்டாலின் ட்வீட்

    கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு முக ஸ்டாலின் ட்விட்டரில் பின்வருமாறு கருத்து பதிந்துள்ளார். 

    10:02 (IST)03 Jun 2019

    கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முக ஸ்டாலின்

    கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முக ஸ்டாலின். துரைமுருகன், டி.ஆர். பாலு, வி.பி.துரைசாமி, எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் ஸ்டாலினுடன் இருந்தனர்.

    09:59 (IST)03 Jun 2019

    Kalaignar Karunanidhi Birth Anniversary : பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட்டின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 

    09:56 (IST)03 Jun 2019

    நந்தனத்தில் பொதுக்கூட்டம்

    கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி இன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடாகியுள்ளது.

    09:54 (IST)03 Jun 2019

    திமுக தலைவர்கள் கூட்டம்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தற்போது திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மற்றும் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

    09:19 (IST)03 Jun 2019

    மதிமுக தலைவர் வைகோ மரியாதை

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    09:16 (IST)03 Jun 2019

    அண்ணா அறிவாலயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

    அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள். 

    09:14 (IST)03 Jun 2019

    கலைஞரைப் போன்ற ஒரு சாணக்கியன் இல்லை - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு

    எதுவரை தமிழகம் இருக்குமோ அதுவரை கலைஞர் இருப்பார். அவரில்லாத தமிழகம் நினைப்பிற்கு அப்பாற்பட்டது. அரசியலில் அவரைப் போன்ற ஒரு தலைவர் இந்தியாவில் இனி கிடைக்கமாட்டார் என்றும், அவரைப் போன்ற ஒரு சாணக்கியன் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். மேலும் அந்த பேட்டியில் திராவிட முன்னேற்றக் கழகம் என் தாய்வீடு என்றும், கலைஞர் கருணாநிதியால் தான் நான் அரசியல் கற்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    08:53 (IST)03 Jun 2019

    மலர் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு திமுக தலைவர் மற்றும் கருணாநிதியின் மகனுமான ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மூத்த நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

    08:41 (IST)03 Jun 2019

    நல்ல நண்பன், அமைச்சர், ஆசான் - வைரமுத்து உருக்கம்

    முதல் அமைச்சராய் இருக்கும் ஒருவர் அதிகாலையில் தொலைபேசியில் பேசுவது என்பது அரிது. 35 ஆண்டுகள் அவரோடு தொடர்ந்து தொலைபேசியில் பேசியிருக்கின்றேன்.  முதலமைச்சராய் இருக்கும் ஒருவர் எனக்கு தொலை பேசியில் அழைத்து நான் வேலூருக்குப் போகிறேன். மாலையில் வந்துவிடுவேன். வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு போகவேண்டும் என்று அவசியம் இல்லை.” என்று தன்னுடைய நண்பன் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. 

    08:40 (IST)03 Jun 2019

    நண்பனை இழந்து வாடும் கவிஞர் வைரமுத்து கலைஞரை நினைவு கூறுகிறார்

    ”கலைஞரின் பிறந்தநாள் என்னை உருக வைக்கிறது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் அவரை சந்தித்து, பொன்னாடை போற்றி, பூமாலை சூட்டி, அவர் உள்ளங்கையைப் பற்றிக் கொண்டே சில நேரம் இருந்து  அவரோடு அளவளாவிய அந்த நீண்ட வருடங்கள் இன்று கனவாகிப் போயின.கலைஞரை இழந்ததில் நான் என் நட்பை இழந்திருக்கின்றேன். நண்பராய், மந்திரியாய், நல்ல ஆசிரியருமாய் இருந்த ஒரு பெருமகனை நான் இழந்து  அவர் பிறந்தநாளை மட்டும் ஈரம் தோய்ந்த கண்களோடு கொண்டாடி கொண்டிருக்கின்றேன்.  ஒரு உண்மையை தமிழ் சமுதாயத்திற்கு நான் சொல்லியாக வேண்டும். என்னை அவர் நேசித்தார். எந்த அளவிற்கு நேசித்தார் என்பதை என் உடலும், நரம்பும், உதிரமும் மட்டும் தான் ஊருக்கு சொல்லக்கூடும்.”

    08:24 (IST)03 Jun 2019

    அனைவராலும் நேசிக்கப்பட்ட தலைவன் - மம்தா பானர்ஜீ

    தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை அவருடைய பிறந்த நாளில் நினைவு கூறுகின்றேன். அனைவராலும் நேசிக்கப்பட்ட சிறந்த ஆளுமை கொண்ட நல்ல தலைவர் அவர் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வருமான மம்தா பானர்ஜீ ட்வீட் செய்துள்ளார்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலி’ என்று அழைக்கப்பட்ட திருக்குவளை கிராமத்தில் இசை சார்ந்த எளிய குடும்பத்தில் 1924, ஜூன் 3-ம் தேதி பிறந்தவர் தட்சிணாமூர்த்தி. நமக்கு புரியும்படி சொல்லவேண்டுமாயின் கலைஞர் கருணாநிதி. தந்தை, முத்துவேலர் நாட்டு வைத்தியர். தாய் – அஞ்சுகம். உடன் பிறந்தவர்கள் பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரண்டு சகோதரிகள்.

    மேலும் படிக்க : கலைஞர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் – உடன் பிறப்புகள் உற்சாக கொண்டாட்டம்!!

    Dmk M Karunanidhi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment