/tamil-ie/media/media_files/uploads/2018/11/1200px-Thiruchendur11.jpg)
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா : தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் திருச்செந்தூர் சுப்ரமணியன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலாகும். நாளை திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி கவசத் திருவிழா தொடங்க உள்ளது. நாளை அதிகாலையில் 1 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்பட உள்ளது.
1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுதல், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை போன்றவை நடக்கிறது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளில் சூர சம்ஹாரம் நடைபெறும். கந்த புரணாத்தில் இடம் பெற்றிருக்கும் யுத்த காண்டத்தில் வரும் இந்த சூர சம்ஹார விழாவைப் பற்றி புராணக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த வருடம் சூர சம்ஹார விழாவானது நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது. கோவில் கலையரங்கில் இந்த 6 நாட்களுக்கும் காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களிலும் சமய சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க : நெல்லையில் சீரும் சிறப்புடன் நடைபெற்ற மகா புஷ்கரணி
திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச விழா - ஐந்தாம் நாள்
இன்று கந்த சஷ்டி கவச விழாவின் ஐந்தாம் நாள். நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகனை நேரில் தரிசனம் செய்தனர்.
முருகன் இன்று தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வரும் நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது. நாளை மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்வானது திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.