குமரி மாவட்டத்தில் அய்யா வழி என்னும் புதிய வழிபாட்டு முறையை தோற்றுவித்த அய்யா வைகுண்ட சுவாமியின் 191 ஆவது அவதார தின விழா நடைபெற்றது.
இன்றைய குமரி மாவட்ட பகுதிகள் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மன்னர் ஆட்சி காலத்தில் உயர் சமுகத்தினர் மட்டுமே ஆலயங்களுக்குள் சென்று இறைவனை தரிசிக்க அனுமதிகப்பட்டனர். ஆண்டான் அடிமை என்ற ஏற்றத் தாழ்வு அதிகமாக காணப்பட்டது.
இதையும் படியுங்கள்: 6 மாத கால புனரமைப்பு பணிகள் நிறைவு: திருச்சி காவிரி பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

இந்தநிலையில், குமரி மாவட்டம் சுவாமி தோப்பு பகுதியில் வாழ்ந்த முடிசூடும் பெருமாள் தாழ்த்தப்பட்ட மக்களின் மத்தியில் புதிய இறை வழி பாட்டு முறையை அறிமுகப்படுத்த முனைந்தார். இந்த செயலை பார்த்த அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர் முடிசூடும் பெருமாள் என்பது ஒரு ஆதிக்க சமுகத்தின் பெயராக உள்ளது, எனவே முடிசூடும் பெருமாள் என்ற பெயரை மாற்றச் சொல்லி ஆணை பிறப்பித்தது நாட்டு மக்களின் மத்தியில் பரவியது. முடிசூடும் பெருமாள் என்பது இவரது பெற்றோர்கள் வைத்த பெயர்.
சாமி தோப்பில் வைகுண்ட சாமியின் தலைமை பகுதியாக திகழும் பகுதியில் உள்ள முந்திரி கிணற்றில் பதமிட்டு வழி பட்ட பக்த்தர்கள் வடக்கு வாசலுக்கு வருவார்கள். அவர்கள் வந்ததும்.அய்யாவை வழிபடுவார்கள். அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை “தலைவாசல்” என அய்யா வழி பக்தர்களால் உச்சரிக்கப்பட்ட பெயர். சுவாமி தோப்பில் இப்போது வடக்கு வாசல் பகுதியாக இருக்கும் இடத்தில் தான் அய்யா ஆறு ஆண்டுகள் தவம் புரிந்துள்ளார்.

சுவாமி தோப்பின் இன்றைய குரு பால ஜனாதிபதியிடம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக பேசிய போது, இதே வடக்கு வாசலில் தான் அய்யா ஆறு ஆண்டுகள் தொடர்ந்து தவம் இருந்தார். அதில் முதல் இரண்டு ஆண்டுகளில் மூன்றுக்கு, மூன்று என்னும் சதுர அடி அகலம் நிலத்தில், கழுத்தளவு உள்ள பள்ளத்தில், வடக்கு முகமாக நின்று முதல் இரண்டு ஆண்டுகள் தவம் மேற்கொண்டார். அந்த நாட்களில் தண்ணீரை மட்டுமே உணவாக அய்யா உட்கொண்டார்.
அடுத்த இரண்டு ஆண்டுகள் கழுத்து வரை மண் மூடப்பட்ட நிலையை மாற்றி பள்ளத்தை மண் இட்டு முழுவதும் நிரப்பி மூடி அந்த இடத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். இந்த கால கட்டத்தில் உணவாக பாலையும், பழத்தையும் உண்டார்.

மூன்றாவது இரண்டு ஆண்டுகளில் மண் தரையில் காவி துணியை விரித்து, அதன் மீது ஆறு கால்கள் கொண்ட கட்டிலில் வடக்கு திசையை நோக்கி தவம் மேற்கொண்டுள்ளார். தவம் மேற்கொண்ட சம காலத்தில் மக்களுக்கு பல போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாகவே அய்யா வைகுண்டர் பதிகளில் (கோவில்) வடக்கு வாசல் அமைக்கப்படுகின்றன.
தலைமை பதியான சாமிதோப்பில் அமைந்துள்ள வடக்கு வாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக இருந்தார். அதனால்தான் இன்றும் இங்கு பக்தர்கள் அமைதியாக, அய்யா சிவ சிவ அரிய அகரா என வழிபடுகிறார்கள். இந்த பகுதியில் தான் அய்யாவின் இருக்கையும், தூண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திரு மண்ணும் உள்ளது. நிலை கண்ணாடியை பார்த்து மக்கள் வழி பாடுகிறனர். இந்த வழி பாடு சொல்லும் அறம், நெறி. “உன்னிலும் நான் இருக்கிறேன்”. என்ற உயர்ந்த கொள்கையாகும். “நான்”என்றால் பகவானாகிய அய்யா வைகுண்டரை குறிக்கிறது என்ற வரலாற்று தகவல்களை நம்மிடம் சொன்னார்.

அய்யாவின் 191 ஆவது அவதார தினத்தை கொண்டாடும் அய்யாவின் பக்தர்கள், ஒவ்வொறு ஆண்டும் மாசி மாதம் 20 ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினத்தை கொண்டாடுகின்றனர். இவ்வாண்டும் அய்யாவின் அவதார விழா ஊர்வலம் இன்று (மார்ச்4) அதிகாலை, நாகர்கோவில் நாகராஜா கோயில் வளாகத்தில் இருந்து தலைமை பகுதியான சுவாமி தோப்பு நோக்கி புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் அண்டை மாநிலமான கேரளாவின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களும் நேற்று மாலை முதலே நாகராஜா கோவில் வளாகத்தில் கூட தொடங்கினர். இதை போன்று, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த மக்களுடன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களும் அய்யாவின் 191வது அவதார ஊர் வலத்தில் பங்கேற்றனர்.
குரு பால ஜனாதிபதி ஊர்வலத்துக்கு தலைமை வகித்தார். ஊர்வலம் கோட்டார் பகுதிக்கு வந்த போது, கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தின் சார்பில் தேவாலய பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களும் பாலஜனாதிபதி மற்றும் அவர்களோடு வந்த அய்யா வைகுண்டரின் பக்தர்களை வரவேற்றனர். குரு பாலஜனாதிபதிக்கு, அய்யா வழிபாட்டு முறைப்படி பங்குத்தந்தை தலைப்பாகை கட்டி மரியாதை செய்வது பன்னெடும் காலமாக தொடரும் மதம் கடந்த மானிட நேய பண்பாடாக தொடர்கிறது.

புனித சவேரியார் தேவாலயம் சார்பாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், குமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்தும் பங்கேற்றார். ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தும் வாகனத்திலும், அய்யாவின் அன்புக் கொடியை கைகளில் பிடித்தபடி ஊர்வலத்தில் பங்கு பெற்றனர். தமிழகத்தின் பழமையான கோலாட்டம் ஆடிய படியே சிறுமிகளும் பங்கேற்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil