scorecardresearch

குடும்பத்தின் ஆலமரமாக நின்ற கருணாநிதி: ஃபேமிலி போட்டோ பூரிப்பு

கருனாநிதியின் குடும்ப புகைப்படத்தை எடுக்க வந்த புகைப்பட கலைஞரே பிரமித்து நின்றார்.

Karunanidhi Family Tree
Karunanidhi Family Tree

Karunanidhi Family Tree : கருணாநிதி தமிழகத்திற்கு எந்த அளவுக்கு தலைவராக இருந்தாரோ, அதே அளவு அவரது குடும்பத்தையும் ஆலமரமாக நின்று தாங்கினார். கருணாநிதியின் குடும்பத்தை ஒரு மரமாக வர்ணித்தால், அதன் கிளைகள் அத்தனையையும் தாங்கிய ஆணிவேர் அவர்!

திமுக தலைவர் கருணாநிதியை அறிகிறவர்கள், அறிந்தவர்கள் அத்தனை பேரும் அவரது குடும்பக் கிளைகள் குறித்தும் அறிய விரும்புவது இயற்கைதான்! அவரது குடும்பமே அவருக்கு பலமாகவும், சில வேளைகளில் விமர்சனங்களில் சிக்க வைப்பதாகவும் இருந்திருக்கிறது.

நதி போல் பறந்து விரிந்து  வாழ்ந்துக்  கொண்டிருக்கும் கருணாநிதியின் குடும்பம் பற்றி சில சுவாரசியமான தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு…

DMK Chief Kalaignar Karunanidhi Family Tree Structure :  சமத்துவ குடும்பத்தின் ஆணிவேர் கருணாநிதி

திருவாரூர் மாவட்டம் திருக்குவளை, கருணாநிதியின் பூர்வீகம் ஆகும். முத்துவேலர்- அஞ்சுகம் அம்மாள் தம்பதியின் மகனாக கருணாநிதிக்கு இரண்டு சகோதிரிகள்.  ஒருவர் பெயர்  பெரியநாயகத்தம்மாள், மற்றொருவர்  சண்முக சுந்தரத்தமாள்.

சிறு வயதிலியே கருணாநிதிக்கு அவரின் சகோதரிகள் மீது அதிகம் பாசம்.  அவரின் தயார், ‘பெண் பிள்ளைகள் வீட்டிலேயே இருங்கள். வெளியில் செல்லாதீர்கள்’ என்று கடிந்தால் அதற்கு எதிராக முதலில் ஒலிப்பது கருணாநிதியின் குரல் தானாம்.

கருணாநிதியின் மூத்த மனைவி பத்மாவதி. இவர்களது மகன் மு.க.முத்து. தந்தையின் கலையுலக வாரிசாக திரைத்துறையில் கால் பதித்தார்.எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனைகளை நடிப்பில் அதிகம் பிரதிபலித்தார் மு.க.முத்து.

 

karunanidhi Family Tree, kalaignar karunanidhi Family Tree, கருணாநிதி குடும்பம், கருணாநிதி வரலாறு, கருணாநிதி மரணம், karunanidhi wives, karunanidhi family, karunanidhi wiki, karunanidhi house
karunanidhi Family Tree: கருணாநிதியின் குடும்ப புகைப்படம்

கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாள். இவரது பிள்ளைகள் மு.க.தமிழரசு, செல்வி, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின்.  கருணாநிதியின் 3 ஆவது மகனான   மு.க.ஸ்டாலின்  தமிழகத்தின் துணை முதல்வராகவும், உள்ளாட்சி துறை அமைச்சர், சென்னை மாநகர மேயர் என பல பதவிகளை வகித்துள்ளார்.

தற்போது திமுகவின் செயல்தலைவரும் ஸ்டாலினே ஆவர். கருணாநிதியின் இரண்டாவது மகன் மு.க.அழகிரி. 2009ல் மன்மோகன் சிங் அரசில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் மகள் கனிமொழி. மாநிலங்களவை உறுப்பினராகவும், தற்போது தி.மு.க மகளிரணி செயலாளராகவும் இருந்து வருகிறார். சண்முக சுந்தரத்தம்மாளின் வாரிசுகள் முரசொலி மாறன் செல்வம்  முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர். மூன்று முறை மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். மத்திய அமைச்சரவையில் தி.மு.க  கோலோச்ச அடித்தளமிட்டவர்.

அண்ணாவிடம் இரவல் வாங்கிய இதயத்தை திருப்பி அளித்த கருணாநிதி! To Read, Click Here

முரசொலி மாறனின் இரண்டாம் மகன், கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன். மத்திய அமைச்சரவையில் இரு முறை மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார். இந்தியாவிலேயே மத்தியிலும், மாநிலத்திலும் அதிகம்பேர் பதவி வகித்த ஒரே குடும்பம் என்றால் அது கருணாநிதி குடும்பம் மட்டுமே.

இரண்டு தலைமுறைகளை தாண்டி தற்போது மூன்றாம் தலைமுறையாக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், அழகிரியின் மகன் துரை தயாநிதி, தமிழரசுவின் மகன் அருள் நிதி ஆகியோர் சினிமாவிலும், அவ்வப்போது அரசியலிலும் தலைக்காட்டி வருகின்றனர்.

கருணாநிதி குடும்பத்தினரின் கிச்சன் கேபினட் மற்ற அரசியல் குடும்பத்தை விட மிகப்பெரியது. பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன் என மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தின் ஆணிவேராக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி மட்டுமே.  எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் சரி மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

இவர்கள் அனைவரின் பெயரையும் கருணாந்தி  தடுமாறாமல் சொல்வார் என்பது பூரிப்பான குறிப்பு. திமுக தலைவரின் வெற்றிக்கு அவரின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது என்றால் அது மிகையாகது.  கருணாநிதி உடல்நலம் சரியில்லாமல் இருந்த நேரத்தில் அவரின் குடும்பத்தார் அவரை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொண்டனர்.

அவரிடம் பாட்டு பாடுவது, கிரிக்கெட் விளையாடுவது,  திருக்குறள் ஓப்பிப்பது என  அவருக்கான மதிப்பை  எல்லா நேரமும் கொடுத்துள்ளனர்.  ஒருமுறை  கருணாநிதி குடும்பத்தின் இல்லத் திருமண விழாவில் ஃபேமலி ஃபோட்டோ எடுக்க வேண்டு என்று குடும்பத்தினர் ஆசைப்பட்டுள்ளனர்.

அப்போது மேடை மேல் மொத்த சொந்தங்களும் வந்து நிற்க,  ஃபோட்டோ எடுக்க வந்த புகைப்பட கலைஞரே பிரமித்து நின்றுள்ளார். ஆகஸ்ட் 7-ம் தேதி நிகழ்ந்த கருணாநிதியின் மரணம் உடன்பிறப்புகளைப் போலவே அவரது குடும்பத்தையும் நிலைகுலைய வைத்திருக்கிறது. கருணாநிதியின் உடல் அடக்கத்தின் போது மெரினாவில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மொத்த குடும்பத்தின் அழுகையும் அதை உணர்த்தியது.

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Karunanidhi family tree