பீனிக்ஸாக எழுவார் கருணாநிதி: குஷ்பூ உருக்கம்

நடிகை குஷ்பூ ஏற்கனவே திமுக.வில் இருந்தவர். கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவர்.

Karunanidhi Health News: கருணாநிதி பீனிக்ஸாக எழுவார் என நடிகை குஷ்பூ உருக்கமாக குறிப்பிட்டார். அவருக்காக கோடிக்கணக்கானோர் நடத்தும் பிரார்த்தனை பலிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Karunanidhi Health கருணாநிதி உடல்நிலை LIVE UPDATES TO Read, click Here

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக காவேரி மருத்துவமனை கூறியிருக்கிறது. நடிகை குஷ்பூ ஏற்கனவே திமுக.வில் இருந்தவர். கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவர். கோபாலபுரத்திற்கு அண்மையில் ஒருமுறையும், காவேரி மருத்துவமனைக்கும் சென்று கருணாநிதியின் நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தந்தி டி.வி.க்கு நடிகை குஷ்பூ அளித்த பேட்டி வருமாறு: ‘தலைவர் கலைஞர் அவர்களைப் பொருத்தவரை, தமிழகம்-இந்தியாவில் மட்டுமல்ல- உலகம் முழுவதும் ஒரு போராளியாக பார்க்கிறாங்க. இதுக்கு முன்னாடி எத்தனையோ சோதனைகளில் அவர் மீண்டு வந்திருக்கிறார்.

ரைசிங் லைக் அ பீனிக்ஸ் என அவரை பார்த்திருக்கிறோம். இப்ப உடல்நிலையில் சின்ன மாற்றம் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இதிலிருந்து மீண்டு நம்ம மத்தியில் பேசுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

நான் ரொம்ப க்ளோஸா இருந்திருக்கேன். என்ன வார்த்தை சொல்றதுன்னு எனக்கு தெரியல. எனக்கு வெரி வெரி எமோஷனல் மொமெண்ட்! எனக்கு மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்கள் அவருக்காக பிராத்தனை பண்றாங்க. கடவுள் இருக்காருன்னா கேட்பாரு. உடல்நிலை சரியாகும் என நம்பிக்கை இருக்கிறது.’ என தழுதழுக்க கூறினார் குஷ்பூ.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close