கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன் புதுச்சேரி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா தொற்று! மருத்துவமனையில் அனுமதி
’கறுப்பர் கூட்டம்’ என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகக் கூறி, தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, ’கறுப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் கைது செய்யப்பட்டார். இதில் முன் ஜாமீன் கோரி, அந்த சேனலை சேர்ந்த தொகுப்பாளர் சுரேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமை ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும் பல்வேறு தகவல்களை வழங்கி வருவதாக குறிப்பிட்டிருந்தார். அதன்படி, ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட்ட பதிவு தொடர்பாக 6 மாதத்திற்கு பிறகு ஜூலை 14-ஆம் தேதி அளித்த புகாரில் தன் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், வலதுசாரி சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றி வருவதால் அதை முடக்கும் நோக்கில் தன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதால், அதில் தான் கைதாவதிலிருந்து தவிர்க்க முன் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்.
தொப்பையால் அவதியா – தயிர், ஆரஞ்சு இருக்க கவலை ஏன்?
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார் சுரேந்திரன்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”