கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை பொது தேர்தலில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் (48450) வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டார். அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் போட்டியிட்ட அதன் தலைவர் திருமாவளவன் ( 48363) தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் வந்தபோது, நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் தேர்தல் அதிகாரி விஜயராகவன் ஆஜராகி நிராகரிப்பட்ட தபால் வாக்குகளை பிரித்து நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். நிராகரிக்கப்பட்ட 102ல் சிலவற்றில் ஓட்டு சீட்டில் இல்லையென்றும், பலவற்றில் சான்றொப்பம் சரியாக இல்லை என்றும் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.
இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றியை எதிர்த்து வி.சி.க தலைவர் திருமாவளவன் தொடர்ந்த தேர்தல் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.