கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனை வந்தார் கேரள முதல்வர்
M Karunanidhi Health UPDATES : சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை சந்தித்தார் கேரள முதல்வர் பினராய் விஜயன்
M Karunanidhi Health UPDATES : Kerala CM met Karunanidhi
கேரள முதல்வர் பினராய் விஜயன் மருத்துவமனையில் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் (Kerala CM met Karunanidhi ). முதுமையின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் கடந்த 27ம் தேதி இரவு முதல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து அவரை சந்திக்க பல்வேறு முக்கிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் வந்து செல்கின்றனர்.

காவேரி மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன்
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்க காலை 11 மணியளவில் வந்தடைந்தார். பின்பு ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்து தெரிந்துக் கொண்டார்.
#Karunanidhi is a born fighter and he has tremendous will power, says #KeralaCM #PinarayiVijayan after meeting #MKStalin at #kauveryhospital | @DeccanHerald pic.twitter.com/2UES9sjgVc
— Sivapriyan E.T.B. (@sivaetb) 2 August 2018
இந்த சந்திப்பின் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர், “கருணாநிதி ஒரு பிறவி போராளி; அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.