கேரளா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் நேற்று 14 மாவட்டங்களிலும் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அங்கிருக்கும் 39 அணைகளில் 33 அணைகள் நிரம்பிவிட்டதை தொடர்ந்து, அனைத்து அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
கேரளாவில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக அணைகள் நிரம்பி வழியத் தொடங்கின. அதில் இடுக்கி அணையும் ஒன்று. அங்கிருந்து உபர்நீர் திறக்கப்பட்ட காரணத்தால் முல்லைப் பெரியாறில் வெள்ள நீர் புகுந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக கேரள எல்லைப் பகுதியில் ஆற்றை ஒட்டி வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
முல்லைப் பெரியாறு நிலவரம் - தேனி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணை மட்டும் பவானி சாகர் அணை என இரண்டும் இம்மழையால் மிக விரைவாக அதன் கொள்ளளவை எட்டின. முல்லைப் பெரியாறு அணையில் சுமார் 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் எந்நேரமும் அந்த அணை நிரம்பும் சூழல் உருவாகியது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கச் சொல்லி பினராயி விஜயன் கடிதம்
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142ல் இருந்து 139 அடியாக குறைக்கச் சொல்லி கேரள முதல்வர பினராய் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
2:00 PM: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. கிருஷ்ணசாகர் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி, கபினியில் இருந்து 65,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக 1.90 லட்சம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இது 2 லட்சம் கன அடியாக உயரும் வாய்ப்பு இருக்கிறது.
கடந்த 2003-ம் ஆண்டு 1.84 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டதுதான் இதற்கு முன்பு அதிகபட்சம் ஆகும்.
01.00 pm : மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி தந்து உதவுமாறு கேட்டுக் கொண்ட ராகுல் காந்தி
Kerala is in great pain. I spoke to PM and requested him to massively increase deployment of the Army & Navy. I also said that it is critical that he gives the state special financial assistance as this is a tragedy without parallel in Kerala’s history. #IndiaStandsWithKerala
— Rahul Gandhi (@RahulGandhi) 16 August 2018
12.30 pm : கன்னியாகுமரியில் ரயில் போக்குவரத்து பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் எரனியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களுக்கு மத்தியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இதுவரை நான்கு ரயில்கள் தாமதம் அடைந்திருக்கிறது. குருவாயூர் - சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - மும்பை CSMT எக்ஸ்பிரஸ், திபுகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், காந்திதம் - திருநெல்வேலி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்.
12.15 pm : மிகப்பெரும் ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய கன்னியாகுமரி மாவட்ட மக்கள்
தென்தமிழக மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் வெள்ள நீரால் தத்தளித்து வருகிறது. திங்கள்சந்தை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ரயில் போக்குவரத்தினை சைகை மூலம் தடுத்தி நிறுத்தினார்கள். இதனால் அங்கு மாபெரும் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது. இடர்பாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொதுத்துறை நிர்வாகிகள்.
12.00 pm : மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரம்
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 8-ஆம் தேதி முழுக் கொள்ளளவை எட்டியது கபினி அணை. கபினி அணியில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணை சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
இந்த வருடத்தில் இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூருக்கு சிறப்பு பேரிடர் மீட்பு படை வருகை.
11.45 am : தமிழகத்தில் நீடிக்கும் கனமழை; 5 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை
தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லை, தேனி, கோவை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் உத்தரபாளையம், போடி தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
நெல்லை மாவட்டம் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், அம்பாசமுத்திரம், செங்கோட்டை, வி.கே.புதூர், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
11.30 am: தமிழகத்தில் நிரம்பும் அணைகள்
முல்லைப்பெரியாறு, பவானி சாகரைத் தொடர்ந்து தமிழகத்தில் அமராவதி நதியும் நிரம்பி வருகிறது. திருப்பூர் மாவட்டம் அமராவதி நதிக்கரையோரம் குடியிருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர மாவட்ட ஆட்சியரகம் உத்தரவு.
அதே போல் தேனி மாவட்டம் முல்லைப்பெரியாறு நதியோரம் குடியிருக்கும் மக்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
11: 15 am : கோவை மாவட்டத்தில் மண் சரிவு
கோவையில் பலத்த மழை. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பகுதியில் மண் சரிவு. போக்குவரத்து பாதிப்பு. வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அரசுப் பேருந்து பணிமனையில் வெள்ளம் புகுந்தது. டீசல் டேங்குகள் வெள்ள நீரில் மூழ்கியதால் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தம். இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்பிற்குள்ளாகியது.
11.00 am : கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ள அபாய எச்சரிக்கை
பேச்சிப்பாறை - 45.0மி.மீ
பெருஞ்சாணி - 50.0மி.மீ
சித்தாா் - 54.0 மி.மீ
சித்தாா் - 42.0மி.மீ
மாம்பழத் துறையாறு - 28.0 மி.மீ
புத்தன் அனண:54.2 மி.மீ
நாகர்கோவில் :20.2 மி.மீ
இரணியல் - 15.6 மி.மீ
குளச்சல் - 32.0 மி.மீ
சுருளோடு - 54.0 மி.மீ
கன்னிமாா் - 35.2 மி.மீ
பூதப்பாண்டி - 28.2 மி.மீ
மைலாடி - 11.4 மி.மீ
கொட்டாரம் - 14.2 மி.மீ
பாலமோா் - 59.6மி.மீ
அடையாமடை - 52.0மி.மீ
ஆனை கிடங்கு - 17.2மி.மீ
குருந்தன் கோடு - 17.0மி.மீ
ஆரல்வாய் மொழி - 10.0 மி.மீ
கோழிப்போர் விளை - 28.0 மி.மீ
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.