எங்களுக்கு ஒரே பாதுகாப்பு நீதிமன்றம் மட்டும் தான் - அமைச்சர் கே.என்.நேரு
ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியில் தான் அதிகம் இருக்கிறோம். அவ்வாறு இருக்கும் போது எங்களுக்கு ஒரே பாதுகாப்பு நீதிமன்றம் மட்டும் தான் – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியில் தான் அதிகம் இருக்கிறோம். அவ்வாறு இருக்கும் போது எங்களுக்கு ஒரே பாதுகாப்பு நீதிமன்றம் மட்டும் தான் – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியில் தான் அதிகம் இருக்கிறோம். அவ்வாறு இருக்கும் போது எங்களுக்கு ஒரே பாதுகாப்பு நீதிமன்றம் மட்டும் தான் – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
திருச்சியில் மோட்டார் வாகன விபத்து வழக்கு தொடர்பான சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிலையில், இன்னும் வழக்குகளை விரைவாக முடிக்க, 2-வது சிறப்பு நீதிமன்றத்தை இன்று (சனிக்கிழமை) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி நிர்மல்குமார் குத்துவிளக்கேற்றியும் பின்னர் பெயர் பலகையையும் திறந்து வைத்தார்.
Advertisment
மோட்டார் வழக்கு தொடர்பான இழப்பீடு உள்ளிட்ட தீர்ப்புகள் தாமதமாவதை தடுக்கும் வகையில் விரைந்து தீர்ப்புகள் வழங்கப்பட ஏதுவாக இந்த 2-வது நீதிமன்றம் செயல்பட உள்ளது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என் நேரு பேசுகையில்.. நடப்பாண்டு திருச்சிக்கு வழக்கறிஞர்கள் சேம்பர் வரும், ஆளுங்கட்சியிலும் இருந்திருக்கிறோம். எதிர்க்கட்சிகயிலும் இருந்திருக்கிறோம், ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியில் தான் அதிகம் இருக்கிறோம். அவ்வாறு இருக்கும் போது எங்களுக்கு ஒரே பாதுகாப்பு நீதிமன்றம் மட்டும் தான், ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பு தருகின்ற, பாதுகாக்கின்ற அமைப்பு. இப்படியும் இருந்திருக்கிறோம், அப்படியும் இருந்திருக்கிறோம். இன்றைக்கு காவல்துறை எழுந்திருந்து வணக்கம் சொல்லுவார்கள், நாளை வண்டியில் ஏறு என்று சொல்லுவார்கள். எப்போதும் நீதிக்கு உற்றதுணையாக இருந்தவர்கள், இருப்பவர்கள் நீதியரசர்கள் தான் என பேசினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நிர்மல் குமார் பேசியதாவது; மனுதாரர்கள் குடும்பத்தினருக்கு பல்வேறு பணத்தேவைகள் இருக்கும் பட்சத்தில், அதனை பூர்த்தி செய்ய மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விரைந்து முடித்து அவர்களுக்கான தொகையை விரைந்து பெற்று தர நீதியரசர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உதவிட வேண்டும், இந்த சிறப்பு நிதி மற்றும் மோட்டார் வாகன வழக்குகளை விரைந்து முடிக்கவும் நிவாரணம் பெற்று தரவும் உதவிகரமாக இருக்கும்.
வழக்கறிஞர்கள் மனுதாரர்களிடம் வழக்குகளுக்கு அதிக தொகை வசூலிக்க கூடாது, பர்சன்டேஜ் கணக்கில் பணம் வசூலிக்க வேண்டாம். மேலும், மனுதாரர்களின் சூழலை கருத்தில் கொண்டு நீதியரசர்கள் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், இன்சூரன்ஸ் மற்றும் வங்கிகளுடன் கலந்துபேசி நிவாரணத்தை விரைந்து பெற்றுத்தர வேண்டும் எனப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் திருச்சி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் முல்லை சுரேஷ், வெங்கட், மணிவண்ண பாரதி, அந்தோணி, கவியரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil