scorecardresearch

கோவை மாநகராட்சியில் புகார் அளித்தும் பலனில்லை; தூய்மை பணியில் தானே ஈடுபட்ட பெண் கவுன்சிலர்; வைரல் வீடியோ

கோவை மாநகராட்சியில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டததால் கவுன்சிலர் ஷர்மிளா தானே இறங்கி தூய்மை பணியை மேற்கொள்ள திட்டமிட்டார்

kovai councilor
கோவையில் தூய்மை பணி மேற்கொண்ட பெண் கவுன்சிலர்

கோவை மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் தூய்மை பணியை மேற்கொள்ளப்படாததால், பெண் கவுன்சிலர் ஒருவர் தானே களத்தில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாநகராட்சி பகுதியான வடவள்ளி பகுதியில் உள்ள பூங்கா மற்றும் தெருக்களில் சரிவர தூய்மை பணி மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதியை சேர்ந்த மக்கள் 38 ஆவது வார்டு அ.தி.மு.க கவுன்சிலரான ஷர்மிளா சந்திரசேகரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: மோசடி புகார் மீது நடவடிக்கை இல்லை :கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

எனவே, மாநகராட்சி அதிகாரிகளிடம் தூய்மை பணி மேற்கொள்ள கவுன்சிலர் வலியுறுத்தினார். இருப்பினும் எந்த விதமான பணியும் நடைபெறவில்லை.

பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டததால் கவுன்சிலர் ஷர்மிளா தானே இறங்கி தூய்மை பணியை மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி முதற்கட்டமாக வடவள்ளி பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான க்ரியோ கார்டன் பார்க் புதர்களாக காட்சியளித்து சமூக விரோதி கூடாரமாக மாறியது. இதனை சுத்தம் செய்யும் வகையில் பெண் கவுன்சிலர் ஷர்மிளா புதர்களை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கவுன்சிலருடன் இணைந்து பணியை மேற்கொண்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக பூங்காக்கள் பராமரிக்கபடாததால் இங்கு இருக்கும் பொருட்கள் திருடு போய்விட்டதோடு மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார். தற்போது பெண் கவுன்சிலர் ஒருவர் களத்தில் இறங்கி தூய்மை பணி மேற்கொள்ளும் வீடியோ வைராலகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kovai admk councilor cleaning park video goes viral