scorecardresearch

முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு உள்ளது – பொள்ளாச்சி ஜெயராமன்

தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் கோபமாக உள்ளனர். முன்னாள் முதலமைச்சருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் அளவிற்கு தற்போது சட்ட ஒழுங்கு உள்ளது – கோவையில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

கோவையில் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
கோவையில் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதலமைச்சருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் அளவிற்கு தற்போது சட்ட ஒழுங்கு உள்ளது என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலைய சம்பவ விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் தி.மு.க அரசை கண்டித்தும் கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: நெல்லை மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி

கோவை மாவட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், கந்தசாமி, கே.ஆர் ஜெயராமன், ஏ.கே செல்வராஜ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டு தி.மு.க அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் கோபமாக உள்ளனர். முன்னாள் முதலமைச்சருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் அளவிற்கு தற்போது சட்ட ஒழுங்கு உள்ளது என்று கூறினார். மேலும், தி.மு.க அரசு தண்ணீர் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kovai admk protest for case against eps