கோவையில் தமன்னா என்ற இளம்பெண் ஆயுதங்களுடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை பிடிக்க கோவை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி வரை அவரை பீளமேடு காவல்துறையினர் இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து கஞ்சா வழக்கில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், அவருக்கு நீதிமன்ற காவல் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படியுங்கள்: கோவை: பஸ்சுக்குள் ஷவர் மழை… பயணிகள் கடும் அவதி!

இந்நிலையில் தமன்னா (எ) வினோதினி தரப்பில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இதனை விசாரித்த நீதிபதி நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளார். அதன்படி மறு உத்தரவு வரும் வரை தினமும் பீளமேடு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil