Advertisment

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்; பொள்ளாச்சி கவியருவியில் குளிக்க வனத்துறை அனுமதி

ஆறு மாதங்களுக்குப் பிறகு பொள்ளாச்சி கவியருவியில் குளிக்க வனத்துறை அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pollachi kaviaruvi

ஆறு மாதங்களுக்குப் பிறகு பொள்ளாச்சி கவியருவியில் குளிக்க வனத்துறை அனுமதி

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் குரங்கு அருவி எனப்படும் கவியருவிக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படும் என பொள்ளாச்சி வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Advertisment

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதி வால்பாறை சாலையில் ஆழியார் அணையை ஒட்டி வனத்துறை கட்டுப்பாட்டில் குரங்கு அருவி எனப்படும் கவி அருவி உள்ளது. முக்கியமாக இந்த அருவி மிகவும் பிரபலமானது என்பதால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாநிலத்திலிருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வார்கள்.

இதையும் படியுங்கள்: கோவில் நிலத்தை அபகரித்த பாஜக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஜி.ராமகிருஷ்ணன்

இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக வெயிலின் தாக்கத்தினாலும் கடும் வறட்சியினாலும் கவியருவி தண்ணீர் இன்றி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய காரணமாக வால்பாறை, சத்தி எஸ்டேட் போன்ற நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கவி அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி அருவியில் கொட்டும் நீர் வரத்தை பொறுத்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கப்படுவர் என தெரிவித்து இருந்தார்.

தற்போது வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் மழையின் தாக்கம் சற்று குறைந்ததால் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக வருவதால் நாளை முதல் கவி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படும் எனவும் அருவியில் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி அறிவித்துள்ளார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore Pollachi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment