கோவை: ரியல் எஸ்டேட் பார்ட்னர் வீட்டிலேயே 2 கிலோ தங்கம் கொள்ளை; பலே ஆசாமிகள் கைது
கோவை ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் 2 கோடி பணம், 100 பவுன் தங்க நகைகள் கொள்ளைப்போன வழக்கில் மூன்று பேர் கைது; கூட்டாளியாக பழகியவர்களே கொள்ளையடித்து காவல்துறை விசாரணையில் அம்பலம்
கோவை ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள்
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா காலனியில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி ராஜேஸ்வரி என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இரண்டரை கோடி பணம், 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisment
கோவை ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணா காலனி பகுதியைச் சேர்ந்த 60 வயதான ராஜேஸ்வரி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி என்பவர் ரியல் எஸ்டேட் சம்பந்தமாக அவருடன் அறிமுகமாகி பின்னர் இருவரும் தொழில் செய்து வந்து உள்ளனர். பின்னர் வர்ஷினி. தனக்கு தெரிந்த இடைதரகர்கள் எனக் கூறி அருண்குமார், சுரேந்தர், பிரவீன் என ஆகிய மூன்று பேரை ராஜேஸ்வரிக்கு அறிமுகம் செய்து வைத்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி ராஜேஸ்வரி வீட்டில் வர்ஷினி மற்றும் அவருடன் பழகிய இடைத்தரகர்கள் ஒன்றாக உணவு அருந்தியுள்ளனர். பின்னர் ராஜேஸ்வரியை தூங்க வைத்து விட்டு வர்ஷினி இரவு 11 மணிக்கு இரண்டரை கோடி பணம் மற்றும் 100 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
காலையில் பீரோவை திறந்து பார்த்த ராஜேஷ்வரி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து, இராமநாதபுரம் காவல் நிலையித்தில் புகார் செய்த நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
கோவை இராமநாதபுரம் காவல் நிலையம்
விசாரணையில் இவ்வழக்கில் குற்றவாளியான அருண்குமார், சுரேந்திரன், பிரவீன் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் திருவள்ளூர் மாவட்டத்தில் கைது செய்து உள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து 33 லட்ச ரூபாய் பணம் மற்றும் 31 பவுன் நகையை மீட்டு உள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வர்ஷினி மற்றும் நவீன்குமார் ஆகியோரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தொடர்ந்து கைது செய்தவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil