கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதியில் 30 பேர் உளவுத்துறை கண்காணிப்பின் கீழ் உள்ளதாக மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
மேலும் கோவை மாவட்ட குற்ற வழக்குகள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
371 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 515 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.73,54,370 மதிப்புள்ள 551.787 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தள்ளிவைப்பு; நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டம்!
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 288 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 417 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.56,39,320 மதிப்புள்ள 380.282 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.19,00,000 மதிப்புள்ள உயர்ந்த ரக போதை பொருட்களும் உள்ளடங்கும்.
951 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 1001 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.1,59,69,515 மதிப்புள்ள 18,042.280 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 670 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 712 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.1,40,07,486 மதிப்புள்ள 15,092.300 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
6571 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 6667 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து 21,138.940 லிட்டர் (61,874 பாட்டில்கள்) மதுபானங்கள் மற்றும் 111 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 3975 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 4013 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து 14,325 லிட்டர் (35,968 பாட்டில்கள்) மதுபானங்கள் மற்றும் 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 310 குற்றவாளிகள் மீது 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய். 12,60,400 மதிப்புள்ள 31,510 எண்ணிக்கையிலான லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய். 4,05,015 ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 241 குற்றவாளிகள் மீது 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய். 5,38,360 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய். 3,24,450 ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 1378 குற்றவாளிகள் மீது 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.38,95,800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 894 குற்றவாளிகள் மீது 145 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.33,26,480 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil