scorecardresearch

தமிழக சாலைகளில் கொட்டப்பட்ட கேரளக் கோழிக் கழிவுகள்; திருப்பி அள்ள வைத்த கோவை இளைஞர்கள்

கேரளாவில் இருந்து கொண்டு வந்து தமிழக நெடுஞ்சாலைகளில் கொட்டப்பட்ட கோழிக் கழிவுகள்; சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறி திருப்பி அள்ள வைத்த கோவை இளைஞர்கள்

kovai chicken
தமிழக சாலைகளில் கொட்டப்பட்ட கேரளக் கோழிக் கழிவுகள்; திருப்பி அள்ள வைத்த கோவை இளைஞர்கள்

கோயம்புத்தூர் வாளையாறு எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்களை உள்ளூர் கிராமத்து இளைஞர்கள் தட்டிக் கேட்டு மீண்டும் கழிவுகளை எடுக்க வைத்தனர்.

சமீப காலமாக கேரளாவில் இருந்து எடுத்து வரும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இது குறித்து எழுந்த புகார் அடிப்படையில் காவல் துறையினரும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரபடுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: கோவையிலும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு

இந்நிலையில் கேரளாவில் இருந்து மினி ஆட்டோவில் கோழி கழிவுகளை ஏற்றி வந்த மர்ம நபர்கள் வாளையாறு எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டியுள்ளனர்.

இதனை கண்ட உள்ளூர் இளைஞர்கள் இது குறித்து கேட்ட போது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர். இதையடுத்து ஊர் மக்களையும் அழைத்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறி எச்சரிக்கை விடுத்ததையடுத்து, அந்த நபர்கள் மீண்டும் கோழி கழிவுகளை அள்ளி ஆட்டோவில் எடுத்துச் சென்றனர்.

இதனிடையே இளைஞர்கள் கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் ஆட்டோவில் கோழி கழிவுகள் எடுத்து வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kovai youth take action against chicken waste drop in highways from kerala