kp anbalagan corona test : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கே.பி அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்தாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதிமுக- வை சேர்ந்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வெளியாகும் தகவல்களால் அதிமுக-வில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், தனக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் வெறும் காய்ச்சல் மட்டுமே இருப்பதாக கே.பி அன்பழகன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் கணக்கிட முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கடுப்படுத்தி நாட்டு மக்களை காப்பாற்றும் கட்டாய சூழ்நிலையில் தமிழக அரசு உள்ளது. வரும் 31 ஆம் தேதி வரை போடப்பட்டுள்ள கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் இதற்கு பலனளிக்கும் எனவும் நம்பப்படுகிறது.
சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வர அமைச்சர் குழுவை களமிறக்கி கள பணியில் செயல்பட உத்தரவிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி. இந்த நேரத்தில் நேற்று முதல், அதிமுக- வை சேர்ந்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக செய்திகள தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை... அண்ணா பல்கலைக்கழக விடுதிகளை தயார் செய்யும் சென்னை மாநகராட்சி!
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலகத்தில் தனி செயலாளராக இருந்த தாமோதரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். காவல் ஆய்வாளர் முரளியையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இதனால் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் ஒருவிதமான பதற்றமும்,குழப்பமும் நிலவி வருகிறது. கொரோனா குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு கொரோனா உறுதியாகி இருப்பதான தகவல் பயத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் இரவு அமைச்சர் அன்பழகன் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு தொற்று ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததாக இதனை மருத்துவமனை நிர்வாகமே உறுதிப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.
நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார், காமராஜ் உள்ளிட்டோருடன் அன்பழகனும் உடனிருந்தார். அப்போதே அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாகவும், அதன் பின்பு தான் மருத்துவமனையில் அவர் கொரோனா பரிசோதனை செய்யதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த தகவல்களை அமைச்சர், கே.பி அன்பழகன் மறுத்துள்ளார். இன்று காலை அவர் அளித்திருக்கும் பேட்டியில், ”எனக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்றது உண்மை தான், தற்போது காய்ச்சல் சரியாகிவிட்டது. எனக்கு கொரோனா இல்லை.சென்னையில், கொரோனா பாதிப்பு தீவிரமான நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
பெருநகர சென்னை மாநகராட்சியின் (14-வது மண்டலம்) பெருங்குடி, பாலவாக்கம் பல்கலை நகர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு வெப்ப அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டேன். #Corona #TNAgainstCorona pic.twitter.com/Cqm1xwLmfe
— KP Anbalagan (@KPAnbalaganoffl) June 17, 2020
சென்னையை பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு அமைச்சரை பொறுப்பாளராக நியமித்தார் . அந்த அடிப்படையில் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் என்னை நியமித்தார். அதன் அடிப்படையில் அந்தப் பகுதிகளில் ஜூன் 17 அன்று ஆய்வு மேற்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் திரு @KPAnbalaganoffl அவர்கள் #Covid19 -ல் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.
அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும்; பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) June 19, 2020
இந்நிலையில், கே.பி அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்தாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.