ஹாய் பிரெண்ட்ஸ், வீக் என்டை சிறப்பாக கொண்டாடி இருப்பீங்க, வாங்க அதே உற்சாகத்தோட நாம் இன்றைய நிகழ்ச்சிக்கு போவோம்...
குளிர் அதிகம் நிலவும் மலைப் பிரதேசங்களில் மட்டுமே விளையும் கேரட், பீட்ரூட், காலிபிளவர் போன்ற காய்கறிகளை, கும்பகோணம் பகுதியில் விளைவித்து சாதனை படைத்துள்ளார் விவசாயி சேகர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கும்பகோணம் பகுதியில், மலைப் பிரதேச காய்கறிகள் விளையாது' என்றனர். எனினும், நான் நம்பிக்கையுடன், இங்கே அந்த பயிர்களை பயிரிட்டேன். நன்றாக விளைந்ததால், தொடர்ந்து பயிரிட்டு வருகிறேன். அதையே ஒரு நுணுக்கத்துடன் செய்கிறேன். மழை, பனிக் காலத்தில், கேரட், முட்டைகோஸ், காலிபிளவர், புரோகோலி, பச்சைப் பட்டாணி,டர்னிப், பீன்ஸ் போன்ற காய்கறிகளை பயிரிடுகிறேன்.பிற காலங்களில், நாட்டு காய்கறிகளான கத்திரி, வெண்டை, தக்காளி, முள்ளங்கி, கீரைகள், வாழை போன்றவற்றை பயிரிடுகிறேன். எல்லா காய்கறிகளையும், குறிப்பிட்ட காலத்தில் தான் சாகுபடி செய்ய முடியும். அந்த பருவத்தில், அந்தந்த காய்கறிகளை சாகுபடி செய்தால் தான், விளைச்சல் நன்றாக இருக்கும். கேரட், முட்டைகோஸ், காலிபிளவர் எல்லாம், 90 நாள் பயிர்.பனிக் காலத்தில், நம் ஊரே குளிராக இருப்பதால், மலைப் பிரதேச காய்கறிகள் சிறப்பாக வளர்கின்றன.எப்போதும் என் தோட்டத்தில், 20 காய்கறிகள் விளையும். அந்த காய்கறிகளை, நான் சிரமப்பட்டு விற்பதில்லை.என் தோட்டத்திற்கு வெளியே அமைத்துள்ள கடையிலேயே விற்பனையாகி விடும். இயற்கை முறையில், எவ்வித ரசாயனமும் இன்றி விளைவிக்கப்படுவதால், பலர் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.கும்பகோணத்தில், மலைக் காய்கறிகளை விளைவிப்பதால், 'சிறந்த காய்கறி விவசாயி' என, தோட்டக்கலைத் துறை என்னை பாராட்டி, கவுரவித்துள்ளது.
வாழ்த்துக்கள் தோழரே...
கரும்புச்சாறில் தயாரிக்கப்படும் வெல்லத்துக்கு, செரிமானத்தை அதிகரிக்கும் திறன் உண்டு. வைட்டமின் 'சி', இரும்புச்சத்து ஆகியவை, இதில் அதிகம் இருக்கின்றன. சுத்தமான வெல்லம், மங்கிய, அடர்ந்த பழுப்பு நிறமாக இருக்கும்.ஆனால், 'வெள்ளையாக இருப்பதே உண்மை' என நம்பும் பலரும், 'பழுப்பு நிறத்தில் இருக்கும் வெல்லம் அழுக்கானது; சுத்தம் இல்லாதது' என, நினைக்கின்றனர். அவர்களை திருப்திபடுத்தி, வெல்லத்தை விற்பனை செய்ய, கலப்பட கும்பல் தயாராக இருக்கிறது.
வெல்லத்தின் மங்கிய நிறத்தை போக்கி, எடுப்பான மஞ்சள், வெளிர்ந்த மஞ்சள் நிறத்துக்கு மாற்றுவதற்காக, 'சோடியம் ஹைட்ரோ சல்பேட், சூப்பர் பாஸ்பேட், மெட்டானில்' போன்ற ரசாயனங்களையும், சுண்ணாம்பு, கேசரி பவுடர், மைதா போன்றவற்றையும் கலப்படம் செய்து விடுகின்றனர்.இப்படி ரசாயனமும், கேசரி பவுடரும் கலந்து செய்யப்பட்ட வெல்லத்தை, பார்வையிலேயே எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
கவனம் மக்காஸ்...
ஹாய் கைய்ஸ் - கொரோனா வைரஸ் பீதி - ஹேக்கர்கள் கைவரிசை
ஹாய் கைய்ஸ் : படிப்பில் சுட்டி இந்த பாட்டிமாக்கள்- விரைவில் கவுரவம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய சிறுவனின் ஆசையை, நிறைவேற்றும் விதமாக, துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான், அச்சிறுவனை சந்தித்த நிகழ்வு, அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அப்துல்லா ஹுசெய்ன், 7, என்ற சிறுவன், மூன்றாம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அச்சிறுவன், சமூக வலைதளத்தில், தன் நீண்ட நாள் ஆசை குறித்து, ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.அதில், துபாய் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தானை சந்திக்கவேண்டும் என்ற, தன் விருப்பத்தை தெரிவித்திருந்தார். அந்த பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில், துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான், அச்சிறுவனை சந்தித்தார். சிறுவன் அப்துல்லாவை, துபாய் இளவரசர் ஆரத்தழுவி வரவேற்றார். அச்சிறுவனின், இளைய சகோதரருக்கு, இளவரசர், மண்டியிட்டு கைகொடுத்தார். இந்நிகழ்வுகளை, நேரில் கண்ட சிறுவனின் பெற்றோர், நெகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து, பட்டத்து இளவரசருக்கு, அவரின் ஓவியம் ஒன்றையும், சார்மினார் நினைவு சின்னத்தின் மாதிரியையும், அவர்கள் பரிசாக வழங்கினர்.
ஹேட்ஸ் ஆப் பாய்..
உங்களிடம் ஒரு நல்ல ஐடியா இருக்கிறது அதை வர்த்தக ரீதியாக மாற்ற விரும்புகிறீர்கள் என்றால் முதலில் நினைவுக்கு வரவேண்டியது மத்திய அரசின் இணையதளமான 'ஸ்டார்ட் அப் இந்தியா' மட்டுமே.இதில் ஒருமித்த எண்ணமுடைய ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை பார்வையிடலாம். இதுவரை இந்த இணையதளத்தில் 78 ஆயிரத்து 617 நிறுவனங்கள் தங்களை பற்றிய விபரங்களை பதிவு செய்துள்ளன. தமிழகத்திலிருந்து மட்டும் 4,220 கம்பெனிகள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கம்பெனிக்கு 'இன்குபேட்டர்' வசதிகள் கட்டாயம் தேவை. அதற்காக 546 இன்குபேட்டர் பற்றிய தகவல்களும் 'அக்லிரேட்டர்'களாக இருக்கும் 118 கம்பெனிகளின் விபரங்களும் இடம் பெற்றுள்ளன. எந்த ஒரு புதிய கம்பெனிக்கும் நிதி மிகவும் கட்டாயம் தேவை. அதனால் 76 'இன்வெஸ்டர்கள்' தங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் விபரங்களும் கிடைக்கும்.
பயன்பெறுங்கள்..
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.