கோவிட் -19 பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் சிறந்த வருவாய் அதிகாரியாக அறிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக குன்றத்தூர் தாசில்தார் எஸ்.ஜெயசித்ரா, தனது சக அதிகாரிகளுக்கு பிரியாணி விருந்து வைத்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
லாக் டவுன் விதிமுறைகளுக்கு எதிராக நடைபெற்ற இந்த விருந்து சமூக தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தி மொழி கட்டாயம்? : கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்பத்தால் பரபரப்பு – ஆணையர் மறுப்பு
காஞ்சீபுரம் கலெக்டர் பி பொன்னையா பிறப்பித்த உத்தரவின்படி 13 வருவாய் அதிகாரிகள் மாற்றியமைக்கப்பட்ட போது, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலுள்ள PWD விருந்தினர் மாளிகையில் நடந்ததாக தெரியவரும் இந்த பிரியாணி விருந்தில் சுமார் 100 பேர் பங்கேற்றனர். விருந்தினர்களில் பெரும்பாலோர் தாலுகா வருவாய் அதிகாரிகள், வி.ஏ.ஓக்கள், உதவியாளர்கள், துணை தாசில்தார்கள் மற்றும் துணை ஆட்சியர்கள் உட்பட அவரது நண்பர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருதை வென்ற மாநிலம் முழுவதுமான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூன்று அதிகாரிகளில் ஜெயச்சித்ராவும் ஒருவர். குன்றத்தூர் போலீசார் தங்களுக்கு இன்னும் புகார் கிடைக்காததால் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறினார்.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும்? வேலூர் சி.எம்.சி மருத்துவ நிபுணருடன் உரையாடல்
ஜூன் மாதத்தில், கும்மிடிபூண்டி அருகே சுமார் 250 நபர்களுக்கு பிறந்தநாள் விருந்திளித்த திமுக பிரமுகர் ஒருவருக்கு, பின்னர் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரண்டு விருந்தினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இருவர் வைரஸ் தொற்று காரணமாக பலியானார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil