’மன்னிப்பு’...ஒரே வார்த்தையில் மொத்த சர்ச்சைகளுக்கு குஷ்பு முற்றுப்புள்ளி!

அவரின் பெயரை வெளியே சொல்லப்போவதில்லை

அவரின் பெயரை வெளியே சொல்லப்போவதில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kushboo twitter audio

kushboo twitter audio

kushboo twitter audio : நடிகை குஷ்பூ ஊடகங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வெளியான ஆடியோவிற்கு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

Advertisment

நடிகை குஷ்பு பேசியதாக ஆடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.அந்த ஆடியோவில் குஷ்பு ஒருமையில் திட்டி பத்திரிக்கையாளர்களை விமர்சிப்பதாக உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஊடகவியாளர்கள் மத்தியிலும் இந்த ஆடியோ குறித்த விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதுக் குறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பும் கேட்டு மொத்த சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ள்ளார்.

kushboo twitter audio : என்ன நடந்தது?

Advertisment
Advertisements

குஷ்புவின் ட்விட்டர் பதிவில் “என் பெயரில் பரப்பப்படும் அந்த ஆடியோ எடிட் செய்யப்பட்டது. அது தயாரிப்பாளர்களின் வாட்ஸ் ஆப் குருப்பில் இருந்து பகிரப்பட்டுள்ளது. எப்படி இவ்வளவு கீழ்த்தரமான புத்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைத்து அவமானமாக இருக்கிறது.

எனது 34 வருட சினிமா வாழ்க்கையில் என்றுமே நான் ஊடகங்களை தரக்குறைவாக பேசியது கிடையாது. பாதி மட்டுமே வெளியாகியுள்ள அந்த வாய்ஸ் மெஸேஜால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அந்த ஆடியோவை யார் பரப்பினார்கள் என்பது தெரியும். ஆனால் நான் அவரின் பெயரை வெளியே சொல்லப்போவதில்லை. எனது மன்னிப்பே அவருக்கு மிகப்பெரிய தண்டனை” என்று கூறியுள்ளார்.

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார் - பிறந்தநாளில் நிகழ்ந்த சோகம்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், சுமார் 70 நாட்களுக்குப் பிறகு தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க செயலாளராகவும் குஷ்பு தற்போது பதிவியில் இருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: