/tamil-ie/media/media_files/uploads/2019/10/IMG-20191004-WA0003-1.jpg)
Lalitha Jewellery robbery case 2 accused remanded
Lalithaa Jewellery robbery case 2 accused remanded : கடந்த புதன்கிழமையன்று (02/10/2019) திருச்சியில் அமைந்திருக்கும் பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடைபெற்றது. 30 கிலோவிற்கு நிகரான தங்கம், வெள்ளி, ப்ளாட்டினம் மற்றும் வைர நகைகளை கொள்ளையர்கள் சினிமா பாணியில் கொள்ளையடித்துச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அந்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். திருச்சியில் 7 தனிப்படை அமைத்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.
திருச்சியில் எஸ்.ஐ நேருவும், இதர காவலர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தேடப்பட்டு வரும் திருடனான மணிகண்டனை கண்டுள்ளனர். எஸ்.ஐ. நேரு சிறிதும் காலம் தாழ்த்தாமல் மணிகண்டனை சேஸ் செய்து பிடித்தார். அவரிடம் இருந்து 5 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. பைக்கில் பயணித்த மற்றொரு குற்றவாளியான சீராத்தோப்பு சுரேஷ் தலைமறைவானார். அதன்பின்பு திருவாரூரிலும் 2 தனிப்படை வைத்து தேடுதல் வேட்டை தீவிரமாக முடிக்கிவிடப்பட்டுள்ளது. இவ்விரு நபர்களும் பிரபல திருடன் முருகனின் கூட்டாளிகள் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சீராத்தோப்புவில் வசித்து வந்த சுரேஷின் தாயார் கனகவல்லியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்விருவரையும் நேற்று திருச்சி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் காவல்துறையினர். இவ்விருவருக்கும் நீதிமன்ற காவல் 14 நாட்களுக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளார் மாஜிஸ்திரேட் டி. திரிவேணி. அக்டோபர் 18ம் தேதி வரை அவர்கள் திருச்சி மத்திய சிறையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுரேஷ் மற்றும் திருவாரூர் முருகன் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.