Latest political news: ‘வீட்டை காலி செய்யச் சொன்னதால் மன உளைச்சலுக்கு ஆளானேன்’ – நல்லகண்ணு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இணைந்திருங்கள் ஐ.இ தமிழுடன்.

Latest political news in Tamil live updates

Latest political news : தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகள், அரசியல்வாதிகளின் பேட்டிகள், சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் ஆணையம் பற்றிய செய்திகள், வழக்கு விசாரணைகள், பொதுப் பிரச்னைகள், காலநிலை, தங்கம் வெள்ளி விலை, பெட்ரோல் டீசல் விலை உள்ளிட்ட அனைத்தையும் ஐ.இ தமிழில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Latest political news in tamil :
குறிப்பாக வரும் 19-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது. சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் நடக்கும் இந்தத் தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Live Blog

Latest political news in tamil : இன்றைய தமிழக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

19:23 (IST)11 May 2019
News in Tamil: வேதனை தெரிவித்த நல்லகண்ணு

உடனடியாக வீடு காலி செய்யும்படி அரசு கேட்டதால், மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்கு வீடு இல்லை என்றாலும், கக்கன் வாரிசுகளுக்கு அரசு உடனடியாக வீடு வழங்க வேண்டும்; எனக்காக குரல் கொடுத்த தலைவர்களுக்கு நன்றி - நல்லகண்ணு

17:35 (IST)11 May 2019
Tamil News: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

“குற்ற வழக்குகளை மறைத்தவர்களுக்கு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றில் பணி நியமனம் பெற உரிமையில்லை” - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

15:29 (IST)11 May 2019
Latest News in Tamil nadu - தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு

வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது - தங்க.தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு

14:37 (IST)11 May 2019
News in Tamil: நல்லக்கண்ணு வெளியேறியதற்கு டிடிவி தினகரன் கண்டனம்

டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் "முதுபெரும் அரசியல் தலைவரும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான பெரியவர் திரு.நல்லக்கண்ணு மற்றும் தியாகி கக்கன் அவர்களின் மகன் ஆகியோரை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து பழனிச்சாமி அரசு வெளியேற்றி இருப்பது கண்டனத்திற்குரியது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க - 12 வருடமாக வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறினார் நல்லகண்ணு! என்ன காரணம்?

14:20 (IST)11 May 2019
தமிழக அரசு அதை செய்யக் கூடாது - ராமதாஸ்

“தமிழகத்தில் ஒற்றை மொழிப்பாட முறை அறிமுகம் செய்யப்படாது என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட வேண்டும்!” - ராமதாஸ், பாமக நிறுவனர்.

13:03 (IST)11 May 2019
Tamilnadu weather : மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம்  தெரிவித்துள்ளது, 

11:29 (IST)11 May 2019
Rajinikanth latest news : சத்யநாராயணராவ் தகவல்!

மே 23-க்கு பிறகு ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார். 

11:11 (IST)11 May 2019
News in tamil : சென்னையில் போராட்டம் !

பாஜகவுடன் த.மா.கா இணையப்போவதாக நாளேடுகளில் செய்தி வெளியானதை கண்டித்து சென்னையில்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி ஆர்ப்பாட்டம். 

10:13 (IST)11 May 2019
Tamilnadu latest news : தங்கதமிழ்செல்வன் பேட்டி!

அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் சேர்ந்து வாக்களித்தவர் துணை முதல்வர் ஓபிஎஸ் என்று தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

09:44 (IST)11 May 2019
Latest news in tamil :கரூர் எஸ்பி அதிரடி மாற்றம்!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் வரும் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட எஸ்பி- யை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விக்ரமன் கரூர் மாவட்ட எஸ்பி-யாக பொறுப்பேற்றுள்ளார். 

Latest political news : தமிழக அரசியல், பொதுப் பிரச்னைகள், வழக்கு விசாரணைகள், அரசியல்வாதிகளின் பேட்டிகள், வெதர் அப்டேட் உள்ளிட்ட இன்றைய தமிழக செய்திகளை ஐ.இ தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Web Title:

Latest political news in tamil live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close