Advertisment

Latest Tamil News : தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கியச் செய்திகளையும் உடனுக்குடன் இந்த லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Latest Tamil News Live

Latest Tamil News Live

Latest Tamil News Live Updates : தமிழகத்தில் தற்போது நடந்திடும் நிகழ்வுகள் அனைத்தையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்துடன்

Advertisment

Latest Tamil News : Breaking News Highlights

  • நாதுராம் கோட்ஸே குறித்து சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியதால் மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விசாரணை இன்று நடைபெற உள்ளது.
  • நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குசேகரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த நான்கு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
  • நேற்று தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து படிக்க
  • பாலசமுத்திரம் மற்றும் வடுகப்பட்டியில் மறுதேர்தல் பணிகள் தீவிரம். காங்கிரஸ் மற்றும் அமமுக கட்சியினர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

 

Live Blog

Latest Breaking News in Tamil : நாதுராம் கோட்ஸே தொடர்பான கமல்ஹாசன் கருத்து, உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள், 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மேல பல சுவாரசியமான செய்திகளை அறிந்து கொள்ள














Highlights

    17:57 (IST)16 May 2019

    இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு!

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் மதுரை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. 

    17:50 (IST)16 May 2019

    chennai weather : கனமழைக்கு வாய்ப்பு!

    அடுத்த 24 மணி நேரத்தில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    17:35 (IST)16 May 2019

    ஒரே நாளில் தேர்வு:

    வரும் ஜூன் 8 ஆம் தேதி   பி.எட் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு  அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 

    16:32 (IST)16 May 2019

    7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

    15:42 (IST)16 May 2019

    KamalHaasan updates : டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்!

    இந்து மதத்திற்கு எதிராக கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்க்து சேனா தொடர்ந்த கமலுக்கு எதிரான வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிற்பித்துள்ளது. 

    15:33 (IST)16 May 2019

    kamalhassan latest news :கமல்ஹாசன் ஜாமீன் விசாரணை!

    கமல்ஹாசன் முன் ஜாமீன் மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடங்கியது. 

    14:08 (IST)16 May 2019

    Chennai weather today : சென்னையின் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு

    மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று உதகை மற்றும் தேனியில் நல்ல மழை பெய்துள்ளது. இன்று மாலை சென்னையில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    13:45 (IST)16 May 2019

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தொலைதூர படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தொலைதூர படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் http://www.audde.in , http://www.annamalaiuniversity.ac.in போன்ற இணைய தளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். 

    12:46 (IST)16 May 2019

    நடிகர் கமல் ஹாசன் மீது மேலும் ஒரு புகார்

    புதுக்கோட்டையை சேர்ந்த இந்து முன்னணி தலைவர் கருப்பையா கறம்பக்குடி காவல் நிலையத்தில் கமல் மீது புகார் பதிவு செய்துள்ளார்

    12:14 (IST)16 May 2019

    இந்துவைப்பற்றி யார் தவறாக பேசினாலும் அனைத்து இந்துக்களும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் - இல கணேசன்

    இந்துவைப்பற்றி யார் தவறாக பேசினாலும் அனைத்து இந்துக்களும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என பாஜக தலைவர் இல கணேசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். கமல் ஹாசனின் சர்ச்சைக் குறித்த பேச்சிற்கு பதில் தெரிவிக்கும் வகையில் அவர் இந்த கருத்தினை தெரிவித்திருக்கிறார். 

    11:41 (IST)16 May 2019

    Kamal Haasan Controversial Speech : கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க இயலாது

    கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுத்துவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. வழக்கறிஞர் சரவணன் தாக்கல் செய்த மனுவினை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி மனு நிராகரிக்கப்பட்டது.

    11:02 (IST)16 May 2019

    தேனி மறுதேர்தல் விவகாரம் : தேர்தல் ஆணையரை சந்திக்கும் தமிழக காங்கிரஸ்

    தேனி மறு தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை தலைவர் ஆ. கோபண்ணா மற்றும் மூத்த சூரியபிரகாஷ், எஸ்.கே. நவாஸ் ஆகியோர் இன்று மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்கின்றனர். 

    10:21 (IST)16 May 2019

    by-election campaign : சூலூர் தொகுதியில் முக ஸ்டாலின்

    நேற்று திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரத்தை முடித்த திமுக தலைவர் தற்போது சூலூரில் தன்னுடைய பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து இன்று காலையில் அப்பநாயக்கன்பட்டியில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார் ஸ்டாலின்

    09:36 (IST)16 May 2019

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்க வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன்

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்வது குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என்று தேனி தொகுதியின் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

    09:28 (IST)16 May 2019

    டெபாசிட்டை இழப்பது உறுதி - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

    ஈவிகேஎஸ் இளங்கோவன் மேலும், காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என்றும், டெபாசிட்டை இழப்பார் ஓ.பி.எஸ் மகன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    09:25 (IST)16 May 2019

    எத்தனை பெட்டிகளை மாற்றினாலும் ரவீந்தர்நாத் குமார் தேனியில் வெற்றி பெற முடியாது - ஈ.வி.கே.எஸ்

    தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். தேனியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில் “மூன்று நாட்களுக்கு முன்பு தான் கோவையில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தன. சதி வேலைகள் தான் இங்கு நடைபெற்று வருகிறது என்றும், எத்தனை பெட்டிகளை மாற்றினாலும் ரவீந்தர்நாத் குமார் தேனியில் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    09:18 (IST)16 May 2019

    Election Results : மே 23ம் தேதி காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் : ஸ்டாலினுக்கு அழைப்பு

    தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23ம் தேதி டெல்லியில் முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது காங்கிரஸ். கூட்டணிக்கட்சிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க முக ஸ்டாலினுக்கு சோனியா காந்தி அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.

    09:04 (IST)16 May 2019

    Re-Election in Theni - வாக்குப்பதிவு எந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டன

    திருவள்ளூரில் இருந்து தேனி மாவட்டத்திற்கு 20 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 30 விவிபாட் கருவிகளும் கொண்டு செல்லப்பட்டது. மே 19ம் தேதி பாலசமுத்திரம் மற்றும் வடுகப்பட்டி வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடைபெறுகிறது.

    09:02 (IST)16 May 2019

    Today Fuel Price : பெட்ரோல் டீசல் விலை

    சென்னையில் பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.73.88க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.66க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    08:59 (IST)16 May 2019

    உள்ளாட்சி தேர்தல் தமிழக அரசு அரசாணை

    உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து தீவிரம் காட்டிவருகிறது தமிழக அரசு. ஊரக பஞ்சாயத்து, மூன்றாம் நிலை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் விரைவாக வாக்குச்சாவடிகள் அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

    இரண்டு நாட்களாக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று திருப்பரங்குன்றம்  தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் கோட்ஸே குறித்த தன்னுடைய கருத்தில் மாற்றம் இல்லை என்பதை  தெரிவித்தார். நேற்றைய பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசியது என்ன?
    Tamil Nadu Tamil News
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment