Advertisment

Latest Tamil News : நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை நீக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படுமா ?

Tamil Nadu News Live Updates : தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸுடன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live

Tamil Nadu news today live

Latest Tamil News : இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்துடன்.

Live Blog

Advertisment

Tamil Nadu Breaking News :  நீட் தேர்வு குறித்த அரசியல் தலைவர்களின் கருத்துகள், நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தல், மற்றும் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த முழுமையான தகவல்களை இங்கே பெற்றிடவும்.



























Highlights

    15:42 (IST)06 May 2019

    Sterlite Issue : ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு விவகாரம் : துவங்கியது 11ம் கட்ட விசாரணை

    கடந்த ஆண்டு நிரந்தரமாக தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கலைக்கும் பொருட்டு கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டது தமிழக காவல்துறை. இதில் 13 நபர்கள் உயிரிழந்தனர். அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 268 நேரில் விளக்கம் அளித்ததாக கூறப்பட்டு வருகிறது. 10ம் தேதி வரை இந்த விசாரணை நடைபெற்று வரும்.

    15:22 (IST)06 May 2019

    சி.பி.எஸ்.ஈ. தேர்வில் அசத்திய தமிழக மாணவர்கள்

    திருவனந்தபுர மண்டலத்தில் 99.85% தேர்ச்சியும், சென்னை மண்டலத்தில் 99% தேர்ச்சியும், அஜ்மீரில் 95.89% தேர்ச்சியும் அடைந்துள்ளனர் மாணவர்கள்.

    15:05 (IST)06 May 2019

    உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது எப்படி ? ஆலோசனைக் கூட்டம் முடிவுற்றது

    நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை பாதுகாப்பதற்காக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் தனிப்பிரிவினை உருவாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றவில்லை என்றால் காவல்துறையினர் கொண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக இன்று நடைபெற்றது ஆலோசனைக் கூட்டம்.

    பொதுப்பணிப் துறை, வருவாய் துறை, குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துதல் குறித்து எடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கைகள் என்னென்ன என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    14:43 (IST)06 May 2019

    3 மணிக்கு வெளியாகிறது சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள்

    பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த 25 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். அது குறித்த முழுமையான அப்டேட்டினை தெரிந்து கொள்ள 

    13:10 (IST)06 May 2019

    நாளை முதல் ரமலான் நோன்பு துவக்கம்

    நாளை முதல் ரமலான் நோன்பு துவக்கம் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.  வாழ்த்து செய்திகளை டவுன்லோடு செய்து உங்களின் உறவினர்களுக்கு அனுப்ப 

    12:22 (IST)06 May 2019

    நாளை சென்னையில் எங்கெல்லாம் மின்தடை

    காரப்பாக்கம், பூந்தமல்லி, சமயபுரம் ஆபிசர் காலனி, ராஜேஸ்வரி காலனி, திருமுருகன் நகர், செட்டியார் அகரம், ஓம் சக்தி நகர், விவேகானந்தர் நகர் ஆகிய இடங்களில் நாளை மின்வெட்டு.

    சென்னையில் நாளை எங்கெல்லாம் மின்தடை என்பதை அறிந்து கொள்ள

    12:22 (IST)06 May 2019

    நாளை சென்னையில் எங்கெல்லாம் மின்தடை

    காரப்பாக்கம், பூந்தமல்லி, சமயபுரம் ஆபிசர் காலனி, ராஜேஸ்வரி காலனி, திருமுருகன் நகர், செட்டியார் அகரம், ஓம் சக்தி நகர், விவேகானந்தர் நகர் ஆகிய இடங்களில் நாளை மின்வெட்டு.

    சென்னையில் நாளை எங்கெல்லாம் மின்தடை என்பதை அறிந்து கொள்ள

    12:01 (IST)06 May 2019

    மூன்று எம்.எல்.ஏக்கள் நோட்டீஸுக்கு தடை

    அறந்தாங்கி, கள்ளக்குறிச்சி, மற்றும் விருதாச்சலம் எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் கொடுத்த நோட்டீஸிற்கு தடை விதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க 

    11:33 (IST)06 May 2019

    கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை

    நீர் நிலைகள், நீர் வழித்தடங்களை பாதுகாப்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தினை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையேற்று நடத்தி வருகிறார்.

    11:06 (IST)06 May 2019

    சென்னை தரமணியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கண்டுபிடிப்பு

    சென்னை தரமணியில் சாலையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கொட்டிச் சென்ற கும்பல்.  ரூ.89,500 மதிப்பிலான நோட்டுகள் போலீஸில் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் தங்களின் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

    10:39 (IST)06 May 2019

    விசாரணைக்கு பிறகு அனைவரும் விடுவிப்பு

    மகாபலிபுரம் அருகே உள்ள பட்டிபுலம் பகுதியில் நடைபெற்ற மதுவிருந்தில் கலந்து கொண்ட 160 நபர்களிடமும் விசாரணை நடத்தி பின் விடுவித்தது காவல்துறை.

    10:23 (IST)06 May 2019

    5ம் கட்ட வாக்குப்பதிவு

    உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் அமைந்துள்ள 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 2.44% வாக்குகளே பதிவாகியுள்ளன.

    10:05 (IST)06 May 2019

    ராமதாஸை போட்டியாக கருதவில்லை - திருமாவளவன் பேட்டி

    கொள்கை அடிப்படையில் தான் பாஜக, பாமக போன்ற கட்சிகளை நான் எதிர்க்கின்றேன். நான் பாமக தலைவர் ராமதாஸை போட்டியாக கருதவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட உரையில் பேசினார்.  இளைஞர்கள் மத்தியில் கல்வி அறிவை வளர்ப்பதற்கு பதில் வன்முறையை தூண்டும் போக்கினை தான் நாங்கள் எதிர்க்கின்றோ என்றும் கூறினார் திருமாவளவன்.

    09:45 (IST)06 May 2019

    By Election : DMK Campaign : அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே 90% முன்னுரிமை

    தமிழகத்தில் வெளி மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி தமிழக இளைஞர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் துரோகம் இழைத்துவிட்டதாக திமுக குற்றச்சாட்டு. இது குறித்த ட்வீட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.

    09:31 (IST)06 May 2019

    மது விருந்தில கலந்து கொண்ட 160 பேர் கைது

    மகாபலிபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் மதுவிருந்து நடைபெற்றதாக புகார் வந்ததை தொடர்ந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் காவல்துறையினர்.  விருந்தில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 160 பேர் கைது செய்யப்பட்டனர்.

    DMK  Campaign : தமிழர்களின் வேலைகள் தமிழருக்கே எதிரொலி : தமிழகத்தில் தமிழக இளைஞர்களின் வேலையை உறுதி செய்வதே திமுகவின் நோக்கம் என்றும், தமிழகத்தில் உள்ள மத்திய மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90% இடம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடைய பரப்புரையில் கூறி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment