Tamil Nadu News: ‘அரசியலை விட்டு ஸ்டாலின் போகக்கூடாது; கனவு கண்டு கொண்டே இருக்கணும்’ – தமிழிசை

Tamil Nadu News : 14/05/2019 - இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விதமான முக்கிய தகவல்களையும் இந்த இணைப்பில் நீங்கள் படிக்கலாம்.

Tamil Nadu news today updates

Latest Tamil News: தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்துவிதமான முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்துடன்.

Breaking News Highlights

LTTE Ban

1991ம் ஆண்டில் இருந்து நிலவி வரும் விடுதலைப் புலிகளுக்கான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது மத்திய உள்த்துறை அமைச்சகம். அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க 

MK Stalin Meeting with KCR

நேற்று மாலை சென்னையில் உள்ள ஆழ்வார் பேட்டையில், திமுக தலைவரை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார். இது தொடர்பான தகவல்களை இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார் முக ஸ்டாலின். அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க 

Kamal Haasan Controversial Speech

கமல் ஹாசன் நாதுராம் கோட்ஸே குறித்து பேசிய சர்ச்சைப் பேச்சால் அரசியல் வட்டாரத்தில் கருத்து மோதல்கள் நிலவி வருகின்றது. ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவர் மற்றும் கமலின் நெருங்கிய நண்பருமான ரஜினிகாந்த் கமல்ஹாசனின் பேச்சிற்கு கருத்து கூற மறுத்துவிட்டார். அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Live Blog

தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் உடனுக்குடன் உங்கள் பார்வைக்கு

20:57 (IST)14 May 2019
ஸ்டாலின் அரசியலை விட்டு போகக் கூடாது - தமிழிசை

அரசியலை விட்டு ஸ்டாலின் போகக்கூடாது; அவர் கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும்

மத்தியில் தாமரையும், மாநிலத்தில் இரட்டை இலையும் வெற்றிப் பெறும்

- தமிழிசை

19:22 (IST)14 May 2019
கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு

சுதந்திர இந்தியாவில் 'முதல் தீவிரவாதி இந்து' என கமல் பேசிய விவகாரம்.

மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசியதாக கமல் மீது அறவக்குறிச்சி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு. மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு

19:13 (IST)14 May 2019
'திமுக பாஜகவுடன் பேசியது உண்மை தான்' - தமிழிசை

தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக பாஜகவுடன் பேசியது என நான் கூறியது உண்மை தான்; எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன். நான் சொன்னது உண்மை என்பதை இப்போதே நிரூபிக்க வேண்டும் என்று அவசியமில்லை. எப்போது தேவையோ எப்போது நிரூபிப்போம்.

- தமிழிசை சவுந்தரராஜன்

16:57 (IST)14 May 2019
அரசியலை விட்டு விலகத் தயார் - ஸ்டாலின்

பாஜகவுடன் நான் பேசியதை நிரூபித்துவிட்டால் அரசியலை விட்டு விலகத் தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சவால் விடுத்துள்ளார்.

16:56 (IST)14 May 2019
மோடியை மிஞ்சிவிட்டார் தமிழிசை - ஆர்.எஸ்.பாரதி

பாஜகவுடன் திமுக பேசியதாக ஒரு பொய்யை தமிழிசை கூறியுள்ளார். மோடியை மிஞ்சும் வகையில் பொய் சொல்ல முடியும் என்கிற வகையில் தமிழிசை பேசியிருக்கிறார்.

சந்திரசேகர் ராவ் சந்திப்பு பற்றி புரிந்துகொள்ளாமல் தமிழிசை பேசுவது அரசியல் பக்குவம் இல்லை என்பதை காட்டுகிறது

- ஆர்.எஸ்.பாரதி

14:09 (IST)14 May 2019
'கமல் மன்னிப்புக் கேட்க வேண்டும்' - ராஜேந்திர பாலாஜி

'இந்து தீவிரவாதி' என்று கூறிய கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்டால், 'நாக்கை அறுக்க வேண்டும்' என்ற எனது கருத்தை திரும்பப் பெறுகிறேன் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

12:30 (IST)14 May 2019
மதுரை பொன்மேனியில் பறக்கும் படையினர் சோதனை

தூத்துக்குடியை தொடர்ந்து மதுரை பொன்மேனி அருகே அமைந்துள்ள தனியார் பள்ளியிலும் அடுக்குமாடி குடியிருப்பிலும் பறக்கும் படையினர் சோதனை.  பள்ளியில் கட்டுக்கட்டாக பணத்தினை அடுக்கி வைத்திருப்பதாக கட்டுப்பாடு அறைக்கு வந்த புகாரை தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் இறங்கியுள்ளனர்.

12:15 (IST)14 May 2019
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டும் - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

நாதுராம் கோட்ஸே குறித்து சர்ச்சையை  கிளப்பும் வகையில் பேசிய கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசிய ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. 

12:04 (IST)14 May 2019
அதிமுக முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் மரணம்

1998ம் ஆண்டு அதிமுக சார்பில் புதுக்கோட்டையில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக பணியாற்றியவர் ராஜா பரமசிவம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் இழந்தார்.

11:49 (IST)14 May 2019
கமல் ஹாசனின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

நாதுராம் கோட்ஸே குறித்த சர்ச்சை கருத்தினை பதிவு  செய்ததிற்காக பல்வேறு கருத்து மோதல்களை சந்தித்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர். சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள அவருடைய வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று அரவக்குறிச்சியில் நடைபெற இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது போல் இன்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் நடைபெற இருந்த தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. 

11:48 (IST)14 May 2019
Flying Squad Searches Korappallam Resort : திமுகவினர் தங்கியுள்ள விடுதிகள் சோதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரப்பள்ளம் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முக ஸ்டாலின் தங்க உள்ள அறை, பிரச்சாரத்திற்கு பயன்படுத்த இருந்த வாகனம் என அனைத்தும் இன்று சோதனையிடப்பட்டது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க 

11:46 (IST)14 May 2019
Today Chennai Weather : அனல் காற்று வீசக்கூடும்

சென்னையில் வானம் சற்று மேகமூட்டத்துடனேயே இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும். மேலும் படிக்க : தமிழக மக்களே கவனம் : அனல் காற்று தகதகக்கப் போகுது!!!

Tamil Nadu Breaking News: அரசியல் நிகழ்வுகள், அரசியல் தலைவர்களின் கருத்துகள், சந்திப்புகள், பொது நிகழ்வுகள், வானிலை தொடர்பான அனைத்து சுவாரசிய தகவல்களையும் படிக்க இணைந்திருங்கள் எங்களின் இணையத்துடன்.

Web Title:

Latest tamil news live updates today election campaign weather political events and more

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close