Latest Tamil Nadu News Updates: விஷால் – நாசர் கூட்டணிக்கு எதிராக களமிறங்கும் பாக்யராஜ்! சூடுபிடித்த நடிகர் சங்க தேர்தல்

today news live: தமிழக செய்திகள் உட்பட அனைத்து நாட்டு நடப்புகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். 

By: Jun 7, 2019, 8:38:00 PM

News in Tamil: நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியாகின.

நீட் தேர்வில் தோல்வி.. மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை. தமிழகத்தில் தொடரும் சோகம்!

இதில் தோல்வியடைந்த 3 தமிழக மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். இதனால் மீண்டும் நீட் எதிர்ப்பு அலை தமிழகத்தில் மையம் கொண்டுள்ளது.

Chennai News Live Updates

தவிர, இன்றைய பெட்ரோல் டீசல் விலை, தங்கம் வெள்ளி விலை மற்றும் அனைத்து நாட்டு நடப்புகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

Live Blog
Tamilnadu Breaking News Today தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்!
18:18 (IST)07 Jun 2019
விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ்
17:53 (IST)07 Jun 2019
தமிழகத்தில் நுழையா வண்ணம் நடவடிக்கை

நிபா வைரஸ் தமிழகத்தில் நுழையா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

17:09 (IST)07 Jun 2019
220 ஏக்கர் நிலம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேவையான 220 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

16:37 (IST)07 Jun 2019
ஒருங்கிணைந்த இந்தியாவை கூறு போட முடியாது - ஐகோர்ட்

‘ஒருங்கிணைந்த இந்தியாவை கூறுபோட முயலும் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’- உயர்நீதிமன்றம்

‘வடஇந்தியர்களின் வேட்டைக்காடாகும் தமிழகம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கருத்து.

15:41 (IST)07 Jun 2019
மனித சங்கிலிக்கு திமுக ஆதரவு

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் வரும் 12-ம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆதரவு

14:28 (IST)07 Jun 2019
தென்மேற்கு பருவ மழை
14:02 (IST)07 Jun 2019
நாங்கள் வியாபாரிகள் அல்ல

இருமொழிக் கொள்கைதான் எங்கள் உயிர். தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல. மக்கள் விரும்பாத மொழியை நாங்களும் ஏற்க மாட்டோம் என இந்தி திணிப்பு பற்றி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

13:55 (IST)07 Jun 2019
ஆசிரியர் தகுதித் தேர்வு

நாளை நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

13:43 (IST)07 Jun 2019
இ - சலான் முறை

போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் வசூலிக்க நவீன இ-சலான் வசதியை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

13:28 (IST)07 Jun 2019
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

அங்கீகாரம், அடிப்படை வசதிகள் இல்லாத 903 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை"

13:25 (IST)07 Jun 2019
போக்குவரத்து விதிமீறலுக்கு இ-சலான் மூலம் அபராதம் : சென்னை போலீஸ் கமிஷனர்

போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் வசூலிக்க நவீன இ-சலான் வசதியை சென்னை போலீஸ் கமிஷனர்  ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்தார். சாலை விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்ற புதிய தொழில்நுட்பம் உதவும் என அவர் கூறினார்.

12:37 (IST)07 Jun 2019
கல்லூரிகளில் கூடுதல் இடங்கள்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 விழுக்காடு கூடுதல் இடங்களுக்கு உயர்கல்வித்துறை அனுமதி. 91 அரசு கல்லூரிகளில் 15 ஆயிரம் இடங்கள் கூடுதலாக சேர்க்க வாய்ப்பு

12:30 (IST)07 Jun 2019
மருத்துவ கல்வி இயக்கம் அறிவிப்பு

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

12:23 (IST)07 Jun 2019
திருநெல்வேலியில் துயர சம்பவம்

திருக்குறுங்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர் பிரசவம் பார்த்ததில் தாய் அகிலா மற்றும் குழந்தை உயிரிழப்பு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

11:49 (IST)07 Jun 2019
துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் பலி

ஓமனில் இருந்து துபாய் திரும்பி கொண்டிருந்த போது ராஷிதியா என்ற இடத்தில் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானது. அதில் ராஜகோபாலன், தீபக் குமார், வாசுதேவ் உள்பட 8 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல்

11:38 (IST)07 Jun 2019
tamil news live: எடப்பாடி பேச்சு

ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ”மக்களின் வசதிக்காகவே 8 வழிச்சாலை திட்டம்; தனிநபரின் வசதிக்காக அல்ல. மக்களிடம் இருந்து நிலங்களை பறித்து 8 வழிச்சாலை திட்டத்தை அவர்களிடம் திணிக்க மாட்டோம்” என்றார். 

11:22 (IST)07 Jun 2019
அற நிலையத்துறை அதிகாரி இடமாற்றம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆய்வு செய்ய சென்ற அறநிலையத்துறை அதிகாரி தனபாலை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலர் ஆணை

10:40 (IST)07 Jun 2019
பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் விலை 14 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.73.70-க்கும், டீசல் விலை 34 காசுகள் குறைந்து ரூ.68.66-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

10:06 (IST)07 Jun 2019
சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு விழா

சேலத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார். 

09:48 (IST)07 Jun 2019
TNPSC குரூப் 4 அறிவிப்பு

செப்டம்பர் 1ஆம் தேதி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

Latest Tamilnadu News: இன்றைய அரசியல்வாதிகளின் பேட்டிகள், கட்சி சம்பந்தமான செய்திகள், பொது விஷயங்கள் என அனைத்து அப்டேட்டுகளும் இங்கே உங்களுக்காக வழங்கப்படும்.

Web Title:Latest tamilnadu news live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X