Advertisment

3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN news, Chennai rains, TN Rains, Summer rain

Latest Weather News: வேலூர், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இலேசான வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

தமிழ்நாடு லேட்டஸ்ட் லைவ் செய்திகள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

publive-image

Chennai Rain : சென்னை வானிலை 

சென்னையைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment