Flash News in Tamilnadu Today Updates : மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே திங்களன்று இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்தார். குடியுரிமை திருத்தம் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) ஆகியவை மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைபடுத்தப்பட்டது என்றும் அவர்களிடம் உறுதியளித்தார். ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியும் திட்டவட்டமாக என்.ஆர்.சி யை செயல்படுத்த ஆந்திர மாநில அரசு ஆதரவளிக்காது என்று கூறினார்.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் : மோடி பிம்பத்தை வைத்து நடக்கும் அரசியல் மாநில தேர்தல்களில் தோற்பது ஏன்?
Explained : என்ஆர்சி +சிஏஏ உங்களுக்கு பாதிப்பு விளைவிக்குமா ?
ஒரு வருட சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியான ஐ.ஐ.டி மெட்ராஸில் இயற்பியல் துறையில் முதுகலைப் படிப்பில் படித்து வந்த ஜெர்மன் மாணவர், குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) மற்றும் முன்மொழியப்பட்ட குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டிருந்தார். இதனால் “உடனடியாக” நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ள பட்டிருக்கிறார்.
Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: ஜார்க்கண்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளை கைப்பற்றி, ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், ஜார்க்க்கண்ட் தோல்வியும் பாஜக-வுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது.
ஜனநாயகத்தை காக்க போராட்டங்களை முன்னெடுப்பது பற்றி அனைத்து எதிர் கட்சிகளும் ஆலோசிக்க வர வேண்டும். குடிமக்கள் பதிவேடு,குடியுரிமை சட்டம் மூலம் நாட்டின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்தியாவின் ஜனநாயக ஆன்மாவை காப்பாற்ற அமைதியான, ஆழமான போராட்டங்கள் அவசியம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பேனர்ஜி தெரிவித்தார்.
Web Title:Tamil nadu news today live updates citizenship amendment act tn politics local body election nrc chennai weather
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் திரௌபதி முர்முவை சந்தித்து உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக டிசம்பர் 29ஆம் தேதி பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் தேப்ஸ்மிதா சவுத்திரி என்ற மாணவி, மேடையில் தங்கப் பதக்கத்தை வாங்குவதற்கு முன்பாக குடியுரிமை சட்டத்திருத்த நகலை மேடையிலேயே கிழித்தார்.
உலக வரலாற்றில் ஜெர்மனி நமக்கு ஒரு இருண்ட அத்தியாயத்தை நினைவூட்டுகிறது
ஜெர்மனி நினைவூட்டும் இருண்ட அத்தியாயத்தை இந்தியாவில் மீண்டும் செய்யாதீர்கள்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய ஜெர்மனி மாணவர் நமது நன்றிக்கு உரியவர்
- ப.சிதம்பரம் ட்வீட்
"தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்.ஆர்.சிக்கும், என்.பி.ஆர்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெளிவாகக் கூறுகிறேன்" என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பள்ளித்தேர்வு வினாத்தாள்கள் இனிமேல் வெளியாகாத அளவிற்கு புதிய திட்டம் கொண்டுவரப்படும்
வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க மாவட்ட வாரியாக தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவர்
- அமைச்சர் செங்கோட்டையன்
வரும் 26ம் தேதி சூரிய கிரகணம் அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோயில்கள் வரும் 25ம் தேதி இரவு மூடப்பட்டு 26ம் தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்படும் - கோவில் நிர்வாகம்
திருவண்ணாமலை : போளூர் ஒன்றிய ஊராட்சி செயலாளர் ஆனந்தன், அவரது தாய்க்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
பெரியாரை இழிவுப்படுத்தும் விதமாக தமிழக பாஜகவினர் ட்வீட் செய்தது கண்டிக்கத்தக்கது
- டிடிவி தினகரன் ட்வீட்
பெண்கள் பாதுகாப்பிற்காக அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸப் எண் மூலம் 25 புகார்கள் வந்துள்ளன
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி குறித்து 10 மின்னஞ்சல் புகார்கள் வந்துள்ளன
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு டிசம்பர் 27,30ஆம் தேதிகளில் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக சென்னையில் உள்ள இன்டர்நெட் நிலையங்களில் போலீசார் சோதனை
குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பவர்களின் ஐபி அட்ரஸ் மூலம் விசாரணை நடந்து வருகிறது.
திருச்சியில், அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். துவாக்குடியை அடுத்த அசூர், பழங்கானங்குடி பகுதிகளில், அமமுகவினர் பிரசாரம் செய்தனர். ஒவ்வொரு சுயேட்சை வேட்பாளருக்கும் வெவ்வேறு சின்னம் என்றாலும் ரைமிங்காக ஓட்டு கேட்டது வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது. தூறலும், சாரலுமாக மழை பொழிந்ததையும் பொருட்படுத்தாது, தலையில் துண்டை போட்டபடியே வேட்பாளர்கள் ஓட்டு வேட்டையாடினர். காலில் விழுந்து வாக்குகள் சேகரித்தோடு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லியும் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர்.
பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தை பாஜக பதிவு செய்து , எதிர்ப்பு வந்ததும் அதனை நீக்கியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவை போடுவதற்கு முன்பே யோசித்து இருக்கலாமே என்று கூறியுள்ள அவர் , மரணித்த பிறகும் பெரியார் மிரள வைத்துள்ளார், அந்த பயம் இருக்கட்டும் என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காவது அதிமுக புலியாக பாயுமா இல்லை மண் புழுவாய் பதுங்குமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபிஹாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் நீதி வழங்க கோரி குடியரசு தலைவருக்கு எம்.பி. வெங்கடேசன் கடிதம்.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஆலோசிக்க வரும் 29ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
ரயில்வே துறையை மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், ரயில்வே வாரியம் சீரமைக்கப்பட்டு இந்திய ரயில்வே நிர்வாக சேவை என்று வழங்கப்படும் என்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி என்ற பொறுப்பினை உருவாக்கவும், ராணுவ விவகாரத்துறை எனும் புதிய துறையை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற உரிமையாளர்கள் “உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு நஷ்ட ஈடு வழங்காவிட்டால் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் படங்களை திரையிட மாட்டோம்” என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அப்போது தங்க பதக்கம் பெற இருந்த ரபிஹாவின் புர்காவை நீக்க கோரி குரல்கள் எழுந்தது. இதை மறுத்த ரஹிபா அங்கிருந்து பட்டம் பெறாமல் வெளியேறினார். இவருக்கு ஆதரவாக தற்போது பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ஆதரவை அவருக்கு தந்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் பாஜகவின் கருத்திற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
தூத்துக்குடி தொகுதி எம்.பி. பாஜகவின் சர்ச்சை பதிவுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின், பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துகளுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது இறந்தவர்களின் குடும்பங்களைச் சந்திக்க இன்று உத்தர பிரேதச மாநில மீரட் நகரத்திற்கு செல்லும் போது போலீசார் தடுத்து நிறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
2004ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும், சரத் பவார், முதல்வர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கினார். இதனால் மனம் நொந்த அஜித் பவார், பொதுஇடங்களிலேயே கட்சிக்கு எதிராக பேசிவந்தார்.
2012ம் ஆண்டில் பிருத்விராஜ் சவான் தலைமையிலான அரசில் துணை முதல்வராக அஜித் பவார் பதவி வகித்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். சரத் பவாரின் தலையீட்டால், பிருத்விராஜ் சவான் ஆட்சி தப்பித்தது.
அஜித் பவார் பற்றிய சிறப்புக் கட்டுரை - இங்கே
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து ‘மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி’ என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றின. பல சட்டக் கேள்விகளையும் , அரசியல் நெறிமுறைகளையும் மகாராஷ்டிரா அரசியல் திரும்பி பார்க்க வைத்தது. மகாராஷ்டிரா அரசியல் தொடர்பான சிறப்பு கட்டுரைகள், இங்கே உங்களுக்காக -
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல் - அடுத்தது என்ன?
அன்று கட்சி, இன்று ஆட்சி! - சிவாஜி பூங்கா சிவசேனாவுக்கு ஏன் அவ்வளவு முக்கியமானதாகிறது?
மகாராஷ்டிரா நீர்ப்பாசன ஊழல்; என்.சி.பி.யின் அஜித் பவார் எப்படி குறிப்பிடப்படுகிறார்?
Explained: மகாராஷ்டிரா அரசியலில் பேசப்படும் கட்சி தாவல் தடை சட்டம் என்றால் என்ன ?
அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக இருப்பார். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான், என்.சி.பியின் அஜித் பவார் மற்றும் சிவசேனாவின் சுனில் பிரபு ஆகியோர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் அகாடி அரசாங்கத்தில் இடம் பிடிக்கின்றனர் . அமைச்சரவை விரிவாக்கம் டிசம்பர் 30ம் தேதி மதியம் 1 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.சட்டமன்ற சபாநாயகர் பதவியைத் தவிர்த்து, காங்கிரஸில் இருந்து மொத்தம் 13 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
குடியுரிமை திருத்தம் சட்டத்த்ற்கு எதிராக தற்போது டெல்லியில் பொதுமக்கள் டெல்லி மண்டி ஹவுஸில் கூடினர். 144 பிரிவு இப்பகுதியில் விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் ஜி.சி.முர்மு, ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் சிஆர்பிஎஃப் டிஜி ராஜீவ் ராய் பட்நகர் ஆகியோர் தில்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்டக் கூட்டத்திற்கு வந்துள்ளனர்.
புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்கள் நடந்து வரும் மத்தியில், மேற்கு வங்கத்திற்கான பாஜக துணைத் தலைவரும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப் பேரனுமான சந்திர குமார் போஸ் தனது எதிர்ப்பை தற்போது வெளிபடுத்தியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்ததுத்து ட்வீட்களின் மூலம் - இந்தச் சட்டத்தில் ஏன் முஸ்லிம்கள் இடம்பெறவில்லை? இந்த சட்டம் மதத்தோடு இணைக்கப்படவில்லை என்று எப்படி சொல்ல முடியும் ? கொஞ்சம் வெளிப்படைத தன்மையோடு நடந்து கொள்ளுங்கள், அனைத்து மதங்களுக்கும் சமூகங்களுக்கும் திறந்திருக்கும் நாடு இந்தியா ...... என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில், இலேசான வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்
தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து திமுக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், ஈரோட்டுப் பூகம்பம் என முத்தமிழறிஞரால் போற்றிய அறிவாசான் தனது அறிவுப்பயணத்தை நிறுத்தி அரைநூற்றாண்டு ஆனது.ஆனாலும் அது வெடித்துக்கொண்டே தான் இருக்கிறது. தமிழினம் உணர்வு பெற அந்த வெப்பம் மேலும் பல நூற்றாண்டுகளுக்குத் தேவை!அவரது பாடங்கள் கைகாட்ட நமது பயணம் தொடரும்! வாழ்க என்று பதிவிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தம் சட்டத்தில் இருக்கும் பாதுகாப்பு கவசம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு இஸ்லாமியர், என்.ஆர்.சி.க்கான தகுதிகளை பூர்த்தி செய்ய முடியாமல், இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்ட என்ஆர்சி பட்டியலில் தனது பெயர் இடம்பெறாமல் போவாராயின், அவர் இந்திய குடியுரிமையைத தானாகவே இழப்பார். என்.ஆர்.சி செயல்முற்றையாகும் விதங்களைப் பற்றியும் அவர்களுக்கு அதிகமான கவலை உண்டு. முஸ்லிம் சமூகத்தில், பலர் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எழுத்துப் பிழைகள் போன்ற ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக பலர் குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விலக்கப்படுவார்கள் என்ற அச்சம் அவர்களிடம் அதிகமாக உள்ளது. அசாமின் என்.ஆர்.சி செயல்பாட்டின் போது பல விண்ணப்பதாரர்களுக்கு (இந்து மற்றும் முஸ்லீம்) இது நிகழ்ந்தது.
மேலும், விவரங்களுக்கு - https://tamil.indianexpress.com/explained/nuts-and-bolts-of-nrc-with-caa-indians-with-documentation/
குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆயிரத்திகும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் , ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2020ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.
பொது தேர்தல் முடிந்து கூட்டப்படும் முதல் சட்டமன்றக் கூடத் தொடரிலும், ஆண்டின் முதல் கூட்டத் தொடரிலும் ஆளுநர் உரை கட்டாயம் என்று அரசியலமைப்பின் சரத்து 176(1) கூறுகிறது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நாளை லக்னோவில் உள்ள லோக் பவனில் திறந்து வைக்கிறார். இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினவிழாவை முன்னிட்டு நாளை திறந்து வைக்கிறார் நரேந்திர மோடி.
இன்று தமிழக முன்னாள் முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் 32வது நினைவு நாள். தமிழகம் முழுவதும் பொது மக்களால் இந்த நாள் மறைந்த தலைவருக்காக அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், மற்றும் அதிமுகவை சேர்ந்த மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியதோடு, உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.
இயேசுபிரான் போதித்த அன்பு வழியை அனனைவரும் பின்பற்றி வாழ்ந்திட உறுதியேற்போம். இந்நன்நாளில் நமக்கான வேற்றுமைகளை மறக்க ஒற்றுமையை பேணிக்காக்க பொதுமக்களுக்கு கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் குடியுரிமை திருத்தம் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) நடைமுறைபடுத்தப்படாது என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்திப்பில் இந்த உறுதியை அளித்துள்ளார்.
முன்னதாக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்.ஆர்.சி-ஐ எங்கள் மாநிலத்திலும் செயல்படுத்த மாட்டோம் - நவீன் பட்நாயக் திட்டவட்டம்