By: WebDesk
Updated: December 25, 2019, 08:01:04 AM
Latest Weather News: வேலூர், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.