Local body election updates : தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் சதவீதம் வாரியாக (மொத்த எண்ணிக்கை : 515 ) திமுக 42.14, அதிமுக 36.31 பெற்றுள்ளன. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (மொத்த எண்ணிக்கை : 5090 ) சதவீதம் வாரியாக திமுக 39.31, அதிமுக 32.77 சதவீதம் பெற்றுள்ளன.
11 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு... எந்தெந்த மாவட்டங்களில் யார் முன்னிலை?
வி.ஐ.பி. வீட்டுப் போட்டியாளர்கள் எத்தனை பேர் வெற்றி?
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் அ.தி.மு.க.2,136 இடங்களிலும் தி.மு.க. 2,356 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன . மாவட்ட கவுன்சிலர்களுக்கான பதவிகளில், திமுக 247 இடங்களிலும் அதிமுக 213 இடங்களிலும் முன்னிலை வகித்தன.
ஒவ்வொரு மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும் ஒன்றிய வார்டுகளிலும் எந்த கட்சி அதிக இடங்களை பெறுகிறதோ அந்த கட்சியை சேர்ந்தவர் தலைவர் மற்றும் துணைத் தலைவராக முடியும். எனவே மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றிய குழுத் தலைவர், துணை தலைவர் பதவிகளை எந்த கட்சி கைப்பற்றப் போகிறது என்பது இன்று மாலை தெரியவரும்.
Live Blog
Local body election in Tamil, Latest News in Local body election Live Updates : ஊரக உள்ளாட்சி வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்று வருவதால் இன்று மாலைக்குள் முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் மாவட்ட கவுன்சிலில் வெற்றி நிலவரம்:
அதிமுக - 213
பாமக - 16
தேமுதிக - 4
பாஜக -6
அதிமுக கூட்டணி இதர - 1
திமுக - 247
காங்கிரஸ் - 13
மதிமுக - 2
விசிக - 1
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 6
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - 2
திமுக கூட்டணி இதர - 3
சுயேச்சை - 1
உள்ளாட்சி தேர்தல் ஒன்றிய கவுன்சிலில் வெற்றி நிலவரம்:
அதிமுக - 1,797
பாமக - 151
தேமுதிக - 94
பாஜக - 87
அதிமுக கூட்டணி இதர - 7
திமுக - 2,110
காங்கிரஸ் - 126
மதிமுக - 16
விசிக - 6
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 71
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - 24
திமுக கூட்டணி இதர - 3
நாம் தமிழர் கட்சி - 1
அமமுக - 95
சுயேச்சை - 479
ஊரக உள்ளாட்சி தேர்தல் 3.45 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள 5067 இடங்களுக்கு 5059 இடங்களில் முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. திமுக - 2,333, அதிமுக - 2184,நாம் தமிழர் அமமுக 95 இடங்கள்
பிற கட்சிகள் 443 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாயாகுளம் கிராம பஞ்சாயத்து தலைவருக்கு பஞ்சவள்ளி மற்றும் சரஸ்வதி போட்டியிட்டனர். தேர்தல் முடிந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இருவரும் 664 வாக்குகள் சமமாக பெற்றதால் குலுக்கல் முறையில் ஊராட்சி தலைவரை தேர்வு செய்தனர். இதில் சரஸ்வதி வெற்றி பெற்றார்.
சேலம் மாவட்டம், அரூர் அடுத்த சோரியம்பட்டியில், செல்லாத வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மரங்களை வெட்டி போட்டு, கற்களை வைத்து, சாலையின் குறுக்கே கயிறு கட்டி பொதுமக்கள் மறியல்.
அரசியல் தலையீடு காரணமாக, தேர்தல் முடிவுகள் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டு.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு. ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை, எதிர்மறைக்கூறுகளை மீறி திமுக கூட்டணி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 2011-ம் ஆண்டைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பிரதான கட்சிகளின் கூட்டணி இல்லாமல் போட்டியிட்ட பாஜக, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்களில் 29 இடங்களையும் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 4 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. இம்முறை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக. தேர்தல் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முடிவுகளின்படி, பா.ஜ., ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 48 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
அதிமுக, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் தான், இந்த உள்ளாட்சி தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள், அதிமுகவிற்கு கிடைக்கவில்லை. இதன்காரணமாக, இந்த பின்னடைவு என்று அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.அதிமுக, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் போட்டியிட்ட இவரது வாரிசுகள், உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில், மொத்தமுள்ள 5090 இடங்களில், 3845 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், திமுக 1650 இடங்களிலும், அதிமுக 1344, பாரதிய ஜனதா 52, சிபிஐ - 59, சிபிஐ (எம்) - 24, தேமுதிக - 86, காங்கிரஸ் - 93, தேசியவாத காங்கிரஸ் - 1, மற்றவை 600 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அப்பகுதியை சேர்ந்த தேவி மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தேவி 318 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது அருகே நின்றிருந்த மற்றொரு வேட்பாளரான பிரியதர்ஷினி, தேவிக்கு வழங்கப்பட்ட சான்றிதழை பறித்து கிழிக்க முயன்றார். மேலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பிரியதர்ஷினி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மீண்டும் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையில், பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இருவருக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழப்பம் நிலவியது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் மொத்தமுள்ள 515 இடங்களில், 207 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், திமுக 109 இடங்களிலும், அதிமுக 74 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில், மொத்தமுள்ள 5090 இடங்களில், 3845 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், திமுக 1629 இடங்களிலும், அதிமுக 1324 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஊரக உள்ளாட்சி தேர்தலில், மக்கள் அளித்துள்ள தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாக துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி பகுதியில், திமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையும், வெற்றியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 5067 இடங்களில், 4548 இடங்களின் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் திமுக 2131 இடங்களிலும், அதிமுக 1946 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் மொத்தமுள்ள 515 இடங்களில், 188 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், திமுக 97 இடங்களிலும், அதிமுக 70 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில், மொத்தமுள்ள 5090 இடங்களில், 3689 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், திமுக 1561 இடங்களிலும், அதிமுக 1271 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
கரூரின் க.பரமத்தி வாக்கு எண்ணும் மையத்தில் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். க.பரமத்தியின் 16வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பதிலாக அதிமுக வேட்பாளர் வெற்றி என்று அறிவிக்கப்பட்டதால் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான போட்டியில் திமுக 244 இடங்களிலும் அதிமுக 225 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர்களுக்கான போட்டியில் திமுக 1981 இடங்களிலும், அதிமுக கூட்டணி 1800 இடங்களிலும், அமமுக 66 இடங்களிலும் நாம் தமிழர் ஒரு இடத்திலும் பிற கட்சியினர் 398 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.
தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "பல்வேறு மாவட்டங்களிலும் எங்கள் தரப்பு வெற்றியை இதுவரை அறிவிக்காமல் இருக்கிறார்கள். எனவே தான் மீண்டும் தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்திருக்கிறோம். இதுவரை 30 சதவிகித தேர்தல் முடிவுகளே வெளி வந்திருக்கிறது. இன்னும் 70 சதவிகித முடிவுகள் வருவதற்குள் என்னென்ன நடக்கப் போகிறதோ. இங்கு ஜனநாயக படுகொலை நடக்கிறது. நாங்கள் இதுவரை கொடுத்த எந்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 492 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது. 389 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது.
மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் இதுவரை மொத்தம் 6 இடங்களில் திமுக வென்றுள்ளது. 2 இடங்களில் அதிமுக வென்றுள்ளது. சிபிஐ ஒரு இடத்தில் வென்றுள்ளது.
இரவு 9.30 மணி நிலவரப்படி, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 443 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது. 356 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது.
வெற்றி விவரம் குறித்த முழு தகவல்களை பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்
கடலூர் 7வது வார்டில் ரா.நிர்மலா வெற்றிப் பெற்றுள்ளார்.
திருவாரூர் - 6வது வார்டில் திமுகவின் ஆர்.கலியபெருமாள் வெற்றி
நீலகிரி - 4வது வார்டில் ரா.வனஜா வெற்றி
மாநில தேர்தல் ஆணையம் மீது மு.க.ஸ்டாலின் வீண்பழி சுமத்துகிறார் என அதிமுகவின் பொன்னையன் தெரிவித்துள்ளார்,
முன்னதாக, திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் திட்டமிட்டு சதி
சென்னை கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் புகாரளித்தது குறிப்பிடத்தக்கது.
10 வாக்குகள் மட்டுமே பெற்றவர் ஊராட்சி மன்ற தலைவரானார்.
திருச்செந்தூர் பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 10 வாக்குகள் மட்டுமே பெற்ற இராஜேஸ்வரி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு.
மொத்தம் பதிவான 13 வாக்குகளில் 10 வாக்குகளை இராஜேஸ்வரி பெற்றதால் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு.
இரவு 8 மணி நிலவரப்படி, மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், திமுக கூட்டணி 162 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 134 இடங்களில் முன்னிலையில், மற்ற எந்த கட்சியும் வேறு தொகுதிகளில் முன்னிலையில் இல்லை.
ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில், திமுக கூட்டணி 1177 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 967 இடங்களிலும், மற்றவை 82 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய 4 வது வார்டு எண்ணிக்கை
பால்தங்கம்(பாஜக) - ஜெனிட்டா(காங்.)தலா 1251 ஓட்டுகள்
முடிவு எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்
வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த அதிமுக பிரமுகர் - திமுக எதிர்ப்பு
வாக்கு எண்ணும் மையத்திற்குள் திமுக போராட்டம் நடத்தியது. தேர்தல் அதிகாரிக்கு எதிராக திமுகவினர் முழக்கம் எழுப்பினர். திமுகவின் ரஞ்சிதம் வெற்றிபெற்றதாக தெரிவித்த நிலையில், திடீரென அதிமுகவின் சரோஜா வென்றதாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
#Breaking: வாக்கு எண்ணும் மையத்திற்குள் திமுக போராட்டம்
* தேர்தல் அதிகாரிக்கு எதிராக திமுகவினர் முழக்கம்
* திமுகவின் ரஞ்சிதம் வெற்றிபெற்றதாக தெரிவித்த நிலையில், திடீரென அதிமுகவின் சரோஜா வென்றதாக அறிவிப்பு#LocalBodyElectionResults | #DMK pic.twitter.com/ZZzKrNnJ3R
— Thanthi TV (@ThanthiTV) January 2, 2020
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் மாவட்டம் வாரியாக அதிமுக வெற்றிப் பெற்ற விவரம் - மாலை 6.30 மணி நிலவரம்
அரியலூர் - 1
ஈரோடு - 0
கடலூர் - 8
கரூர் - 13
கன்னியாகுமரி - 0
கிருஷ்ணகிரி - 3
கோயம்புத்தூர் - 4
சிவகங்கை - 1
சேலம் - 1
தஞ்சாவூர் - 11
தர்மபுரி - 2
திண்டுக்கல் - 11
திருச்சிராப்பள்ளி - 6
திருப்பூர் - 6
திருவண்ணாமலை - 5
திருவள்ளுர் - 1
திருவாரூர் - 9
தூத்துக்குடி - 10
தேனி - 12
நாகப்பட்டினம் - 8
நாமக்கல் - 5
நீலகிரி - 4
புதுக்கோட்டை - 1
பெரம்பலூர் - 0
மதுரை - 4
ராமநாதபுரம் - 7
விருதுநகர் - 0
ஏற்காடு செம்மநத்தம் பஞ்சாயத்தில் கடும் வாக்குவாதம்
திமுக ஆதரவாளர் வெற்றிபெற்றதாக கூறப்பட்ட நிலையில்,திடீரென அதிமுக ஆதரவாளர் வெற்றி என அறிவிப்பு
திமுக ஆதரவாளர்கள் தேர்தல் அலுலவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திமுக வழக்கறிஞர்கள் முறையீட்டை ஏற்றது உயர்நீதிமன்றம்
வாக்கு எண்ணி முடிக்கப்பட்ட இடங்களில் முடிவுகளை அறிவிக்க கோரி மனு
அவசர வழக்காக நீதிபதி சத்யநாராயணன் அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி
முடிவுகள் அறிவிப்பதில் தாமதம்; ஐகோர்ட்டில் திமுக முறையீடு - முழு விவரம்
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் அதிகாரப்பூர்வ வெற்றி நிலவரம்
மொத்த பதவியிடங்கள் - 5090
அறிவித்த பதவியிடங்கள் - 220
அதிமுக - 77 இடங்களில் வெற்றி
திமுக - 94 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் - 8 இடங்களில் வெற்றி
அமமுக - 0
நாம் தமிழர் - 0
பி.ஜே.பி - 2 இடங்களில் வெற்றி
சிபிஐ - 2 இடங்களில் வெற்றி
சிபிஐ(எம்) - 1
தேமுதிக - 1
மற்றவை - 33
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில், திருவள்ளூர் மாவட்ட நிலவரம் குறித்த தமிழக தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய அப்டேட்டுகளை அறிய கீழே க்ளிக் செய்யவும்
வாக்குச்சீட்டில் சின்னம் இல்லை , மறு வாக்குப்பதிவு கோரியும் நடவடிக்கை இல்லை என பெண் வேட்பாளர் குற்றச்சாட்டு
வாக்கு எண்ணும் மையத்துக்குள் திடீரென புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
குண்டுக்கட்டாக வெளியேற்றிய போலீசார் - வாக்கு எண்ணும் மையத்தில் சலசலப்பு
ராஜபாளையம் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் திமுக வேட்பாளர் வெற்றியை அறிவிக்காததைக் கண்டித்து தென்காசி எம்.பி தனுஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் உள்ளிட்ட திமுகவினர் காந்திசிலை அருகே சாலை மறியல்.
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, அரிட்டாப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயது மூதாட்டி வீரம்மாள், 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன், இரண்டு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், இம்முறை வெற்றியை வசப்படுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர் திருநங்கை ரியாவுக்கு வாழ்த்துக்கள் - கனிமொழி எம்.பி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
திருநங்கைகளுக்கு இதுபோன்ற சமூக அங்கீகாரங்கள் தொடர வேண்டும் - கனிமொழி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக திமுக வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். திருநங்கைகளுக்கு இதுபோன்ற சமூக அங்கீகாரங்கள் தொடர வேண்டும். #LocalBodyElections pic.twitter.com/QUV33lOKDH
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 2, 2020
தூத்துக்குடி: புதூர் ஒன்றியம் 1-வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுகன்யா வெற்றி
தூத்துக்குடி: கோவில்பட்டி ஒன்றியம் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் விமலாதேவி வெற்றி.
தூத்துக்குடி: கோவில்பட்டி ஒன்றியம் 3-வது வார்டு அதிமுக வேட்பாளர் கஸ்தூரி வெற்றி.
திருச்சி: தா.பேட்டை ஒன்றிய 1-வது வார்டில் திமுக வேட்பாளர் லலிதா வெற்றி
திருச்சி: திருவெறும்பூர் ஒன்றியம் 9-வது வார்டில் திமுக வேட்பாளர் கயல்விழி வெற்றி
திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் 3-வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி தேவேந்திரன் வெற்றி
அருப்புக்கோட்டை ஒன்றியம் 1-வது வார்டில் அதிமுக வேட்பாளர் மகாலட்சுமி வெற்றி
கோவை: கிணத்துக்கடவு 1-வது வார்டில் அதிமுக வேட்பாளர் கவிதா வெற்றி
ஆண்டிப்பட்டி ஒன்றியம் 3வது வார்டில் அதிமுக வேட்பாளர் லோகிராஜன், 4வது வார்டில் அதிமுக வேட்பாளர் வரதராஜன் வெற்றி
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளும் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் படி, கட்சி அடிப்படையிலான மொத்தமுள்ள 5090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், அதிமுக 19 இடங்களிலும், திமுக 9 இடங்களிலும், மற்றவை 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளும் வெளியாகி வருகின்றன.
மொத்தம் உள்ள 5067 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 107 இடங்களில் முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. அதில் அதிமுக கூட்டணி 59 இடங்களிலும், திமுக கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு, 93 இடங்களில் முன்னிலை நிவலரம் தெரியவந்துள்ளது. திமுக கூட்டணி 57 இடங்களிலும், அதிமுக கூட்டணி 36 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளும் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் படி, கட்சி அடிப்படையிலான மொத்தமுள்ள 5090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், அதிமுக 14 இடங்களிலும், திமுக 4 இடங்களிலும், மற்றவை 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஒன்றிய கவுன்சிலர்
மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வள்ளிமயில் வெற்றி
மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 3 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக நித்யா வெற்றி
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 1 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக தனலட்சுமி வெற்றி
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. நண்பகல் 12 மணிநிலவரப்படி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக 221 இடங்களிலும் ( அதிமுக 47 இடங்கள்) மாவட்ட கவுன்சில் பதவிக்கான தேர்தலில் திமுக 90 இடங்களிலும் (அதிமுக 39 இடங்கள்) முன்னிலை பெற்றுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம், கன்னியாகுமாி மாவட்டம் மேல்புறம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை சிபிஎம்மும், 3வது இடத்தை பாரதிய ஜனதா வேட்பாளரும் பெற்றுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் வளர்மதியின் ஆதரவாளர், செல்வம். இவரது மனைவி அமுதா. அண்மையில் அமுதாவுக்கு, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.இந்நிலையில், மணிகண்டம் யூனியன் சேர்மன் பதவிக்கு, அமுதா, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். இவருக்கு, 'சீட்' கொடுத்ததால், அ.தி.மு.க.,வில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் அமுதா, தி.மு.க., வேட்பாளரிடம், 300க்கும் அதிகமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதை, அ.தி.மு.க.,வினரே கொண்டாடி மகிழ்ந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights