திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் இரு மனைவிகளும் ஊராட்சி தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்தை சேர்ந்த வழுவூர்-அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன். விவசாயியான இவருக்கு செல்வி, காஞ்சனா என்ற 2 மனைவிகள் உள்ளனர்.
இவர்களில் செல்வி ஏற்கனவே வழுவூர் அகரம் கிராம ஊராட்சியின் தலைவராக இருந்துள்ளார். தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வழுவூர் அகரம் கிராம ஊராட்சியின் தலைவர் பதவிக்கு செல்வி மீண்டும் போட்டியிட்டார்.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் அறிய
தனசேகரின் மற்றொரு மனைவியான காஞ்சனாவின் சொந்த ஊர் கோவில்குப்பம் சாத்தனூர். அவருக்கு அவரது சொந்த கிராமத்திலேயே ஓட்டு இருந்தது. கணவரின் ஊரான வழுவூர் அகரம் கிராமத்துக்கு மாற்றவில்லை. கோவில்குப்பம் சாத்தனூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு காஞ்சனா போட்டியிட்டார்.
இந்த 2 கிராம ஊராட்சிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் தனசேகரனின் 2 மனைவிகளும் வெற்றி பெற்று தலைவராகி உள்ளனர்.
2 மனைவிகளையும் கிராம ஊராட்சி தலைவராக்கிய தனசேகரனுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.