Lockdown 4.0 Bus service started between Puducherry and Karaikal : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 60 நாட்களை எட்டியுள்ள நிலையில் மாநிலங்களில் சில இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்மாநில போக்குவரத்து சில மாநிலங்களில் ஏற்கனவே துவங்கியுள்ளது. புதுவையில் நேற்றில் இருந்தே போக்குவரத்து ஆரம்பமாகிவிட்டது. இருப்பினும் காரைகாலுக்கு செல்வதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்று காலை 6 மணிக்கு புதுவையில் இருந்து காரைகாலுக்கு பேருந்து இயக்கப்பட்டது. ஒரே ஒரு பேருந்து 32 பயணிகளுடன் இயக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பேருந்து புதுவையில் இருந்து தமிழகத்தின் கடலூர் மற்றும் நாகை வழியாக செல்கிறது. எனவே இரண்டு மாவட்ட ஆட்சியாளர்களிடம் இருந்து அனுமதி பெறப்பட்டு இந்த பேருந்து இயக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
பாய்ண்ட் டூ பாய்ண்ட்டாக செயல்படும் இந்த பேருந்து புதுவையில் ஆரம்பித்தால், காரைக்காலில் தான் போய் நிற்கும். வேறெங்கும் பயணிகள் ஏறவோ, இறங்கவோ அனுமதி கிடையாது. மக்கள் இந்த பேருந்துக்கு அளிக்க இருக்கும் வரவேற்பினை பொறுத்தே, புதிதாக இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுமா என்பது முடிவு செய்யப்படும் என்றும் புதுவை அரசு அறிவித்துள்ளது.