/tamil-ie/media/media_files/uploads/2020/03/b82.jpg)
lockdown announced for chennai, kanchipuram, erode districts corona virus
சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயானது இத்தாலி, ஈரான் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை 370க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலம், சூரத் நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த 69 வயது முதியவர் வைரஸ் பாதிப்புக்கு பலியாகி உள்ளார் என குஜராத் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு - மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து முழுவதும் ரத்து
இதனால் இந்தியாவில் இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புள்ள 75 மாவட்டங்களில் அனைத்து செயல்பாடுகளையும் முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவசர தேவைகளை தவிர மற்றவற்றை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
இதன்படி, சென்னை, காஞ்சீபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக, வெளிநாட்டில் இருந்து காஞ்சீபுரம் வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
தவிர ஆந்திராவில் மூன்று மாவட்டங்களையும், டெல்லியில் 7 மாவட்டங்களையும், குஜராத்தில் ஆறு மாவட்டங்களையும், ஹரியானாவில் 5 மாவட்டங்களையும், கர்நாடகாவில் 5 மாவட்டங்களையும், கேரளாவில் 10 மாவட்டங்கள் என நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.