மறைந்த கருணாநிதியின் 30வது நினைவு தினமான இன்று மு.க. அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மு.க. அழகிரி பேட்டி :
“எனது தந்தை கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே அமைதி பேரணி நடைபெற்றது. வேறு எந்த நோக்கமும் கிடையாது இந்த பேரணியில் கலந்து கொண்ட கலைஞரின் உண்மையான தொண்டர்களுக்கு நன்றி. இந்த பேரணிக்கு ஒத்துழைத்த காவல்துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.”
அழகிரி அமைதிப் பேரணி குறித்த முழு விவரத்திற்கு
மேலும் முன்னதாக அழகிரியை விமான நிலையத்தில் சென்று வரவேற்ற திமுகவை சேர்ந்த ரவி என்பவர் கட்சியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நீக்கப்பட்டார். அது பற்றி கேள்வி எழுப்பியபோது, “இந்த பேரணியில் கலந்து கொண்ட அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவார்களா?” என் கேள்வி எழுப்பினார் அழகிரி.