மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இறப்பு சான்றிதழ் வெளியீடு

M Karunanidhi death certificate issued : திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

M Karunanidhi death certificate : திமுக தலைவர் கருணாநிதி மறைவு:

திமுக தலைவர் மு. கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். 7ம் தேதி மாலை 6.10 மணிக்கு காலமானார் என்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை அடுத்து இரவு 7.30 மணிக்கு பிறகு அவரின் உடல் கோபாலபுரம் கொண்டுச் செல்லப்பட்டது. சுமார் 8.30 மணியளவில் கோபாலபுரத்தை சென்றடைந்தது அவரை சுமந்து சென்ற வாகனம். பின்பு நள்ளிரவு சிஐடி காலனியில் உள்ள அவரது மற்றொரு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கும் அவரின் உடல் சில நேரம் வைக்கப்பட்டிருந்தது.

21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் நல்லடக்கம்!

8ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு, பின்னர் மாலை 5 மணிக்கு மேல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ராஜாஜி அரங்கில் இருந்து வாலாஜா சாலை வழியாக பெரியார் சிலையை கடந்து, பின்னர் அண்ணா சிலையை கடந்து, காமராஜர் சாலை வழியாக அண்ணா சமாதி அருகே அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தடைந்தது.

M Karunanidhi death certificate : மறைந்த கருணாநிதி இறப்பு சான்றிதழ்:

இரவு 7.30 மணியளவில், அவரின் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரின் மறைவை அடுத்து நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

M Karunanidhi death certificate

M Karunanidhi death certificate: கருணாநிதி இறப்பு சான்றிதழ்

இந்த சான்றிதழில், கோபாலபுரம் இல்லத்தின் விலாசமிட்டு சென்னை மாநகராட்சி அளித்துள்ளது. மேலும் காவேரி மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறவுகளின் பெயர் பட்டியலில், தாய் அஞ்சுகம், தந்தை முத்துவேல் மற்றும் மனைவி தாயாளு அம்மாள் என இவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close