/tamil-ie/media/media_files/uploads/2018/08/Untitled.jpg)
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
Karunanidhi Funeral: கருணாநிதி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்தார். வல்லமை மிக்க மரபினை அவர் விட்டுச் சென்றிருக்கிறார் என ராம்நாத் கோவிந்த் கூறியிருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். இந்தியாவில், பிரதமர் மோடி உட்பட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பிற மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி மறைவு : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்... நாளை சென்னை வருகை எனத் தகவல்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இந்த இரங்கல் செய்தியை தமிழிலேயே தெரிவித்துள்ளார்.
திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— President of India (@rashtrapatibhvn) 7 August 2018
இவர் கடந்த வாரம் 4ம் தேதி கருணாநிதியை காவேரி மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் பற்றி தெரிந்துக்கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.