scorecardresearch

இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சு

சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய உத்தரவு – மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Tamil News
Tamil News Updates

சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (டிசம்பர் 25) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: புதியவகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் – அமைச்சர் பாரதி பிரவீன் பவார்

தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களுக்கு பிற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் அடிப்படையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது

முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது, சானிடைஸ் செய்து கொள்வது போன்ற நெறிமுறைகள் தொடந்து இன்னும் அமலில் தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ma subramanian says rtpcr test is mandatory to china japan passengers