Advertisment

புதியவகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் – அமைச்சர் பாரதி பிரவீன் பவார்

நாட்டில் இதுவரை 4 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் புதியவகை கொரோனாவை தடுக்கவும், எதிர்கொள்ளவும் மத்திய அரசு தயாராக உள்ளது – புதுச்சேரியில் மத்திய அமைச்சர் தகவல்

author-image
WebDesk
Dec 25, 2022 19:00 IST
புதியவகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் – அமைச்சர் பாரதி பிரவீன் பவார்

மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் புதுச்சேரிக்கு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளார்.

Advertisment

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மனதில் குரல் நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நேரலையில் பார்க்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கலந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: விளையாட்டுத் துறை கோரிக்கைகளுக்கு என்னை எப்போதும் தொடர்பு கொள்ளலாம்: கோவையில் உதயநிதி உறுதி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பாரதி பிரவீன் பவார், புதியவகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில் 220 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் நாடு முழுவதும் கொடுக்கப்பட்டு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இரண்டாவது அலைக்குப்பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

12 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பதற்கு சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டில் இதுவரை 4 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் புதியவகை கொரோனாவை தடுக்கவும், எதிர்கொள்ளவும் மத்திய அரசு தயாராக உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Puducherry #Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment