மருத்துவர் சைமன் உடலை கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கொரோனா வைரஸ் பாதித்து பலியான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் […]

madras high court doctor simon hercules case corona virus
madras high court doctor simon hercules case corona virus

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


கொரோனா வைரஸ் பாதித்து பலியான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மாலத்தீவில் சிக்கிய இந்தியர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – அறிக்கை கேட்டு உத்தரவு

இந்நிலையில், அவரது உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி சத்தியநாராயணன் செல்வநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, மருத்துவரின் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி அளித்த கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களை மே 7 வரை வெளியேற்றக் கூடாது – ஐகோர்ட் உத்தரவு

அதேசமயம், அரசின் உத்தரவை எதிர்த்து மருத்துவரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Madras high court doctor simon hercules case corona virus

Next Story
மாலத்தீவில் சிக்கிய இந்தியர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – அறிக்கை கேட்டு உத்தரவு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express